அக்குப்பங்சர்

அக்குப்பங்சர் என்றால் என்ன?

இந்தக் கேள்விக்கு நான் புதிதாக எதுவும் சொல்ல வேண்டியதில்லை, நிறைய நபர்கள் ஏற்கனவே அறிந்து வைத்துள்ள விஷயம். மெல்லிய ஊசிகொண்டு உடலினுள் செருகி அதன் மூலம் நோயைக் குணப்படுத்துவது. இது ஒரு கலையாக இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் அதிலும் குறிப்பாக பழனி மலையில் வாழ்ந்த போகர் சித்தர் பயன்படுத்தியதாகவும் ,பின்னர் அவர் சீன நாட்டிற்கு சென்றபோது அந் நாட்டினர் அக்கலையைக் கற்று அதை ஒரு விஞ்ஞானமாக மாற்றி உலகத்திற்கு அர்ப்பணித்தனர்  என்பது வரலாறு. இந்த மருத்துவ முறையின் மூலம் நோயை முற்றிலுமாக,எளிதாக குணப்படுத்த முடியும். மொத்தத்தில் இதுஒருஎளிய,வலியில்லாத,அதிகபொருட்செலவில்லாத,பக்க விளைவுகள்
 இல்லாத  அற்புதமான ,ஆன்மீக , அறிவியல் கலை என்று சொன்னால் மிகையாகாது.
                        அக்குப்பங்க்சர் நோயின் அறிகுறிகளையோ ,விளைவுகளையோ பார்ப்பதில்லை மாறாக அந்த நோய் ஏற்பட மூல காரணம் (Root cause) என்ன என்பதை கண்டறிந்து அதற்கு ஏற்றாற்போல் சிகிட்சையளிப்பதால் நோயை முற்றிலுமாக வேரோடு  நீக்கி விடுவதால் அதை அற்புத ஆன்மீக அறிவியல் கலை என்கிறோம்.  கால்சியம் குறைபாடு நீங்க வேண்டுமா?

மனித உடலின் பெரும் பங்கு எலும்புகள். உணவு உட்கொள்வதற்கும், அழகான தோற்றத்தை அளிப்பதற்கும் பற்கள் தேவை. இவை நன்றாக இருக்க வேண்டும் என்றால் இவற்றிற்கு கால்சியம் தேவை.
கால்சியம் என்பது சுண்ணாம்பு. எலும்புகளும், பற்களும் கால்சியம் பாஸ்பேட் எனும் பொருளினால் அமைந்தவை. ஆகவே கால்சியம் எனும் சுண்ணாம்புப் பொருள் நமது உடல்நலத்துக்கு அவசியமானது.
கால்சியம் எலும்புகளையும், பற்களையும் வளர்த்து பலப்படுத்துவதோடு வேறு பல வேலைகளையும் செய்கிறது. இடைவிடாது வேலை செய்துக் கொண்டிருக்கும் இதயம் நன்றாக வேலை செய்வதற்கும் கால்சியம் உதவி செய்கிறது.
மேலும், நரம்புகளுக்கும், இரத்தத்திற்கும் கால்சியம் தேவைப்படுகிறது. தேவையான அளவு கால்சியம் உடல் இல்லையென்றால் எலும்புகள் உறுதியுடன் இருக்காது. எலும்புத் தேய்மானம் ஏற்பட்டு பல பிரச்சனை உண்டாகும். பற்களும் விரைவில் சொத்தைப் பட்டு அகற்ற வேண்டிய நிலைக்கு வரும்.
வளரும் குழந்தைகளின் உடம்பில் போதுமான கால்சியம் இல்லையென்றால் எலும்புகள் மென்மையடைந்து வளர்ச்சி குன்றிவிடும். இதய நோயும் உண்டாக வாய்ப்புள்ளது.
குறிப்பாக கருத்தரித்த பெண்களும், குழந்தைப் பெற்ற தாய்மார்களும் கால்சியம் உள்ள உணவை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
கால்சியம் சத்துள்ள உணவுப் பொருட்கள் வருமாறு:
பால், மோர், முட்டையின் மஞ்சள் கரு, முளைக் கீரை, முருங்கைக் கீரை, பருப்பு வகைகளில் கால்சியம் உள்ளது.
தாம்பூலம் போடுவது நமது நாட்டுப் பழக்கம். தாம்பூலத்துடன் சுண்ணாம்பு சேர்ந்துள்ளது. அதன் சாற்றை விழுங்குவதன் மூலம் உடம்பில் கால்சியம் சேர்கிறது.
கேழ்வரகு (ராகி), சோளம், கோதுமை, தவிடு உள்ள அரிசி, உருளைக்கிழங்கு, முள்ளங்கி, பீட்ரூட், காரட், இறைச்சி ஆகியவற்றிலும் ஓரளவிற்கு கால்சியம் இருக்கிறது. அட்ரினல் சுரப்பி என்ன வேலை செய்கிறது

ளரவமற்ற அரையிருட்டுச் சந்து. நீங்கள் தனியே நடந்து போய்க் கொண்டிருக்கிறீர் கள். திடீரென ஒரு காலடியோசை உங்களைப் பின்தொடர்கிறது. திரும்பிப் பார்த்தால், முக மூடியணிந்த ஒரு மனிதன் உங்களை நோக்கி வேக வேகமாக வந்து கொண்டிருக்கிறான். தலைதெறிக்க ஓட ஆரம்பிக்கிறீர்கள். உங்களால் அப்படி ஓட முடியும் என்று அதற்கு முன் உங்களுக்கே தெரியாது.
உங்களுக்குள் பய எச்சரிக்கை மணியை அடித்து, ஓடத் தூண்டியது எது? அதுதான் `அட்ரினல்’ சுரப்பி!
சிறுநீரகங்களின் மேல் கொழுப்பு அடுக்குக் குள் பதுங்கிக் கிடக்கிறது, ஒரு ஜோடி அட்ரினல் சுரப்பி. இந்த முக்கோண வடிவ, ஆரஞ்சு நிறச் சுரப்பிகள் `அட்ரினல்’ (லத்தீன் மொழியில் `அட்’ என்றால் `அருகில்’, `ரீன்ஸ்’ என்றால் சிறுநீரகம்.) அல்லது `சுப்ரா ரீனல்’ (`சுப்ரா’ என்றால் `மேலே’) சுரப்பிகள் எனப்படுகின்றன. நெருக்கடியின்போது இவை சில ஹார்மோன்களை வெளியிடுகின்றன.
பயத்தில் தலைதெறிக்க ஓடுவது, குத்துச்சண்டை வீரரின் `நாக்-அவுட்’ குத்தில் கூடுதல் வேகம், நெருக்கடியான நிலையில் டென்னிஸ் வீரர் `எக்ஸ்ட்ரா’ சக்தியோடு பந்தை அடிப்பது எல்லாமே அட்ரினல் சுரப்பிகளின் கைங்கரியம்தான்.
***

உங்களுக்குத் தெரியுமா?

* அனைத்து `அட்ரினோகார்ட்டிகல்’ ஹார்மோன்களும் கொலஸ்ட்ராலால் ஆனவை.
* இரண்டு அட்ரினல் சுரப்பிகளும் சேர்ந்தே 10 கிராம் எடைக்கும் குறைவாகத்தான் இருக்கும்.
* உடற்பயிற்சி, ரத்தத்தில் சர்க்கரை அளவு அசாதாரணமாகக் குறைவது, ரத்தக் கசிவு, உணர்வுரீதியான நெருக்கடி போன்றவை அட்ரினல் செயல்பாட்டைத் தூண்டும்.
* அட்ரினல் சுரப்பிகள் அவற்றின் எடையை விட ஆறு மடங்கு ரத்த வினியோகத்தைப் பெறுகின்றன.
* வாழ்நாள் முழுவதும் ஹார்மோன்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படவில்லை எனில், அட்ரினல் சுரப்பிகளின் நீக்கம் அல்லது சேதம், மரணத்தை ஏற்படுத்தும்.
* நுரையீரலில் ஏற்படும் புற்றுநோய், அட்ரினல் சுரப்பிகளுக்கும் பரவுகிறது.
* ரத்த மாதிரி எடுக்க முயலும்போது அந்த நர்ஸுக்கு `கார்ட்டிசோல்’ ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கிறது.
***

அட்ரினல் செயல்பாட்டின்போது…

அட்ரினல் சுரப்பியால் `அட்ரினலின்’, `நார்அட்ரினலின்’ ஆகிய ஹார்மோன்கள் வெளியிடப்படும்போது, கீழ்க்கண்ட உடலியல் செயல்பாடுகள் நடைபெறுகின்றன…
* இதயத்துடிப்பு அதிகரிக்கிறது.
* உடலியல் வேதிமாற்ற வேகம் கூடுகிறது.
* கண் பாவை விரிவடைகிறது.
* மூச்சு வாங்குகிறது.
* ரத்த நாளங்கள் சுருங்கி அழுத்தத்தை அதிகரிக்கின்றன.
* தசைகளுக்கான ரத்த வினியோகம் அதிகரிக்கிறது.
* உறையும் நேரம் குறைகிறது.
***

சாதாரண மனிதனை `சூப்பர்மேனாக்கும்’ விஷயங்கள்…

அட்ரினலின் சுரப்பின்போது, துரிதமடையும் உடலியல் வேதிமாற்றம், இதயத் துடிப்பு, அதிகளவில் ஆக்சிஜனை உள்ளிழுப்பது ஆகியவை சட்டென்று சக்தியைப் பொங்கச் செய்கின்றன. கண் பாவை விரிவதால் பார்வைத் திறன் கூடுகிறது. ரத்தம் சீக்கிரமாக உறைவது, அதிக ரத்தக் கசிவைத் தடுக்கிறது. அதிஅவசியமற்ற செயல்பாடுகளான குடல்பகுதிச் சுரப்புகள் மெதுவாகின்றன. இவ்வாறாக, நெருக்கடியில் உள்ள ஒரு நபர் அதைச் சமாளிக்கத் தயாராகிறார்.
***

அட்ரினல் சுரப்பியின் சுரப்புகள்

சுமார் 25 விதமான ஹார்மோன்களை அட்ரினல் சுரப்பி சுரக்கிறது. அவற்றில் முக்கியமான சில…
கார்ட்டெக்ஸின் சுரப்புகள்
கார்ட்டிசோல்- ஹைட்ரோகார்ட்டிசோன் என்றும் அழைக்கப்படும் இது, பிட்யூட்டரி சுரப்பியின் அடினோகார்ட்டிகோடிராபிக் ஹார்மோனால் கட்டுப்படுத்தப்படு கிறது. கொழுப்பு வேதிமாற்றத்தைத் தூண்டுகிறது. குளுக்கோஸ் அளவையும், தண்ணீரைத் தக்க வைக்கும் திறனையும் அதிகரிக்கிறது.
ஆல்டோஸ்டீரான்- மினரலோகார்ட்டிகாய்டு எனப்படுகிறது. பிளாஸ்மா அடர்த்தியைக் கட்டுப்படுத்துவதன் மூலம் சிறுநீரகத்தின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துகிறது.
டீஹைட்ரோபியாண்ட்ரோஸ்டீரான்- இது, வயதாவதைத் தடுப்பதாகவும், பாலியல் செயல்பாட்டை மேம் படுத்துவதாகவும் கருதப்படுகிறது.
மெடுல்லாவின் சுரப்புகள்
அட்ரினலின் அல்லது எபிநெப்ரின்- நெருக்கடி நிலையில் சுரக்கிறது. சண்டையிட அல்லது தப்பியோட உடம்பைத் தயார்படுத்துகிறது.
நார்அட்ரினலின் அல்லது நார்எபிநெப்ரின்- ரத்த நாளங்களைச் சுருக்கி, ரத்த அழுத்தத்தை அதிகரிக் கிறது.
***

அட்ரினல் சுரப்பிகளின் `பொறுப்புகள்’

* உடலியல் வேதிமாற்றத்தைப் பராமரிப்பது.
* ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது.
* வீக்கத்தைத் தடுப்பது.
* மின்தூண்டல் கடத்தல் திரவச் சமநிலையைப் பராமரிப்பது.
* கர்ப்பத்தைப் பராமரிப்பது.
* பூப்படைதல், பாலியல் முதிர்ச்சியைக் கட்டுப்படுத்துவது.
***

அட்ரினல் சுரப்பி பாதிக்கப்படும்போது…

அடிசன்ஸ் வியாதி- இது `ஹைப்போஅட்ரினோகார்ட்டிசிஸம்’ எனப்படுகிறது. `கார்ட்டிசோல்’ குறைவாக உற்பத்தியாகும் நிலை. வழக்கமாக, நோய்த் தொற்றுகளாலும், தன்னியக்க நோய் எதிர்ப்புச்சக்திக் குறைபாடுகளாலும் ஏற்படுகிறது. ஒரு லட்சம் பேரில் 4 பேரை இது பாதிக்கிறது.
குஷிங்ஸ் சிண்ட்ரோம்-கார்ட்டிசோல் அதிகமாக உற்பத்தி செய்யப்படுவது. அட்ரினல் சுரப்பியில் ஏற்படும் கட்டி மற்றும் சில வேதிப்பொருட்களால் ஏற்படலாம்.
அட்ரினல் ஹைபர்பிளேசியா- குறைவான கார்ட்டிசோல் உற்பத்தி. மரபியல் காரணங்களால் ஏற்படலாம் எனக் கருதப்படு கிறது.
பிட்யூட்டரி கட்டி- எண்டோக்ரைன் சுரப்பிகளின் செயல்பாட்டை பிட்யூட்டரி சுரப்பி கட்டுப்படுத்துகிறது. பிட்யூட்டரி சுரப்பியில் ஏற்படும் எந்தச் சேதமும் அதன் அனைத்து ஹார்மோன்களையும் பாதிக்கும்.
விரிலைசேஷன்- ஆண்ட்ரோஜீன்களின் அதிக உற்பத்தியால் முரட்டுத்தனமான தன்மை ஏற்படும் நிலை.
அட்ரினல் கட்டி- இது, `பியோகுரோமோசைட்டோமா’ எனப் படும் புற்றுநோய். இந்நோய், அட்ரினலின் மற்றும் நார்அட்ரினலினை அதிகமாக உற்பத்தி செய்ய வைக்கிறது.
அக்குப்பங்க்சர் ஒரு வைத்திய முறையல்ல ...அது வாழ்க்கை முறை!!!
மனித உடல் பஞ்ச பூதத்தால் ஆனது. மனித உடலில் இருக்கும் பஞ்ச

பூதங்கள் பிரபஞ்ச சக்தியிலிருந்து தனக்கு தேவையான பஞ்ச பூத

சக்தியை வாங்கி உடலை
புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்கின்றன. எப்படியென்றால்...

நம் தோலுக்கடியில் மிக துல்லியமான பாதை ஒன்று உள்ளது. இதை உயிர்ச்சக்தி பாதை என்று கூறுவார்கள். இதன் வழியேதான் பஞ்ச பூத சக்தி ஊடுருவி சென்று உறுப்புகளைச் சேரும்.
ஒவ்வொரு உறுப்புக்கும் ஒவ்வொரு நேரத்தில் மட்டுமே இந்த உயிர் சக்தி பிரதானமாய் செல்லும். உதாரணமாக நுரையீரலுக்கு அதிகாலை 3 - 5 மணி, மண்ணீ­ரலுக்கு காலை 9.11 மணி. இப்படி ஒவ்வொரு உறுப்புக்கும் குறிப்பிட்ட நேரம் வகை செய்யப்பட்டிருக்கிறது.
நாம் உண்ணும் உணவு ஜீரணம் ஆவதற்கான செரிமான செயலாக்கம் வயிற்றில் மட்டுமே நடைபெறுவதில்லை. செரிமான செயலாக்கம் ஆரம்பிக்கும் இடம் வாய். வாயில் உள்ள உமிழ்நீர்தான் செரிமானத்திற்கு பெரிதும் துணைபுரிகிறது.
உமிழ்நீரில் இருக்கும் நுண்கிருமிகள் உணவில் கலந்து செரிமான வேலையை துவங்கும். மனிதனின் உடல் பஞ்சபூத கலவை என்பதுபோல நாக்கிலும் பஞ்சபூதங்கள் இருக்கின்றன. இதனால் மிக நிதானமாக நாக்கின் எல்லா பகுதியிலும் உணவுபடும்படி முழுக்கவனம் செலுத்தி மென்று உண்ணுதல் வேண்டும்.
ஒவ்வொரு பஞ்சபூதமும் ஒரு சுவையோடு தொடர்பு உடையது. நெருப்பு- கசப்பு மற்றும் துவர்ப்பு  சுவையுடனும், மண்- இனிப்பு சுவையுடனும், காற்று -  காரச் சுவையுடனும், நீர்- உப்பு சுவையுடனும், ஆகாயம் - புளிப்பு சுவையுடனும் தொடர்புடையது.
இவைகளை நாம் புரிந்து கொண்டு சாப்பிட பழகிக் கொண்டால் குறைவாக சாப்பிட்டாலே நம் உடலுக்கு போதுமான சக்தி கிடைத்துவிடும். உதாரணமாக 6  சப்பாத்தி  சாப்பிடுபவருக்கு மூன்று சப்பாத்தியே  
 போதுமானதாக இருக்கும்.
அழகையும், ஆரோக்கியத்தையும் விரும்புகிறவர்கள் காலை உணவை 7- 7.30-க்குள் மேலே சொன்ன முறைப்படி நிதானமாக, மென்று சாப்பிட வேண்டும். சமைக்காத உணவுகள், பழங்கள், காய்கறிகள், கேரட், வெள்ளரிக்காய் மற்றும் ஊறவைத்த பருப்பு வகைகள் போன்றவைகளை காலை உணவில் சேர்க்கவேண்டும். பருப்பு வகைகளை நன்றாக அலசி முதல் நாள் இரவே மண் சட்டியில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் 7 மணிக்கு அந்த தண்­ணீரை பருகிய பின்பு ஒவ்வொன்றாக கடித்து மெதுவாக மென்று சாப்பிட வேண்டும்.
இப்படி சாப்பிட்டால் உடலுக்கு என்ன பலன்?
வயிறு பிரபஞ்சத்திலிருந்து சக்தியை காலை 7 முதல் 9 மணிவரை பெறுகிறது. அதனால் 7 மணிக்கு ஆரம்பித்து நிதானமாக 7.30-க்குள் காலை உணவை மென்று முடிக்க வேண்டும். 15 நிமிடங்கள் கழித்துதான் தண்ணீ­ர் பருக வேண்டும். பின்பு 7.45-லிருந்து காலை 11 மணி வரை தண்­ணீர் கூட பருகக்கூடாது. ஏனென்றால் மண்­ணீரல் சக்தியை உள்வாங்கும் நேரம் காலை 9.11 வரை. இது மிக அளப்பரிய சக்தியாகும். அந்த நேரத்தில் பிரபஞ்ச சக்தி அதற்கு முழுமையாக கிடைக்க, அந்த நேரத்தில் எந்த உணவும் உண்ணாமல் இருக்க வேண்டும்.
மண்­ணீரல் பஞ்சபூதத்தில் மண்ணை சார்ந்தது. மண்­ணீரல் சக்தியை பெற்று உடலில் சேமித்தால் அது நம் உடலில் இருக்கும் நச்சுக்களை முழுமையாக வெளியேற்றும். அப்படி நச்சுக்கள் வெளியேறும்போது நம் தோல் அதற்குரிய மினுமினுப்பை பெறும். அழகு தானாக வரும். இதை பின்பற்றினால் 6 மாதத்திற்குள் உடலில் நல்ல மாற்றங்கள் நிகழும்.
மண்­ணீரலின் சக்தி உடலுக்குள் பல விதங்களில் பயன்படும். ஒரு சில நேரங்கள் சாப்பிடாமல் இருந்தாலும் இந்த மண்ணீ­ரல் உடலுக்கு தேவையான சக்தியை மாற்றி கொடுக்கும். இதைதான் சித்தர்களும், முனிவர்களும் பின்பற்றினார்கள். அவர்கள் முதலில் மண்­ணீரலின் சக்தியை சேமித்து பின் வருடக்கணக்கில் தவத்தில் மூழ்கிவிடுவார்கள். அப்போது மண்­ணீரல்தான் தேவையான சக்தியை உடலுக்கு அளித்துக்கொண்டே இருக்கும்.
அது மட்டுமல்லாமல் நம் உடலில் பிற உறுப்புகள் தொய்வடையும்போது மண்­ணீரல் தன் சக்தியை அதற்கு தேவையான சக்தியாக மாற்றிக் கொடுக்கும். உதாரணமாக சிறுநீரகம் பஞ்ச பூதங்களில் நீரை சார்ந்தது. சிறு நீரக செயல்பாடு குறையும்போது மண்­ணீரல் அதற்கு தேவையான நீர் சக்தியாக மாறி உதவும்.
மதிய உணவை 1-2 மணிக்குள்ளும், இரவு உணவை 7-8 மணிக்கும் சாப்பிட வேண்டும். மென்று சாப்பிட்டு 15 நிமிடம் கழித்து தண்­ணீர் பருக வேண்டும். குறைந்தது 3 மணி நேரம் கழித்துதான் தூங்க வேண்டும். சாதாரணமாக 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை தூங்குவது நல்லது. இவ்வாறு செய் தால் அழகையும் ஆரோக்கியத்தையும் பேணலாம்

நுரையீரல் சக்தி ஓட்டப் பாதை The lung meridian is a yin meridian and is paired with the large intestine yang meridian. The lung meridian governs the lungs and breathing. On the inhale, the lungs take air from the universe and turn it into energy in the body and on the exhale they expel waste from the body.
இந்த நுரையீரல் சக்தியோட்டப் பாதையில்குறைபாடுஉண்டாகும்போது ,பலவிதமான நோய்கள்ஏற்படுகின்றன.
நிமோனியா, மூச்சுத்திணறல்,பேசமுடியாத நிலை,மார்புச் சளி , கை மற்றும் கால் மூட்டு வலி, தோல் வியாதிகள்,முடி சம்பந்தப்பட்ட பிரச்சினைகள்,ஆஸ்துமா,இருமல்,மூச்சிறைப்பு,தொண்டைப்புண்,சளியினால்நெஞ்சு நிறைந்திருத்தல்,காரைஎலும்பில் மேற்குழியில்ஏற்படும்வலிகள்,தோள்பட்டை வலிகள் ,கையின் உல் வெளிப் பக்கங்களில்ஏற்படும்வலி போன்றவை.
பஞ்ச பூத விதியின்படி நுரையீரல் இறைவன் வகுத்த நியதியில், அதாவது இயல்பான நிலையில் இயங்கினால் நுரையீரல் சம்பந்தப்பட்ட எந்தவித தொந்தரவும் நமக்கு ஏற்படாது. ஆக இந்த பஞ்ச பூத புள்ளிகளை சமப்படுத்தும் போது நுரையீரலில் ஏற்படும் தொந்தரவுகளை நாம் சரி செய்ய முடியும்.
Running Nose. மூக்கில் நீர் ஒழுகுதல் ,ஜல தோஷம்நாம் ஏற்கனவே  நம் உடல் இயற்கையாகவே  தன்னை சீர் படுத்தும் சக்தி கொண்டது என கண்டோம். நோய் என்பது கழிவுகளின் தேக்கம் என்பதையும், அதற்கு மருத்துவம் கழிவுகளின் தேக்கம் என்பதையும் நாம் அறிய வேண்டும். அப்போது நுரையீரலில் தேங்கியுள்ள கழிவுகளை நம் உடல் தானாகவே நீக்கும் வேலையை செய்யும்போது சில தொந்தரவுகள் நமக்கு ஏற்பட்டாலும்,நாம் பொறுமையுடன் இருக்க வேண்டும்.அப்படி நுரையீரலில் தேங்கியுள்ள கழிவுகளை அது நீராக, நுரையீரலின் வெளிப்புற உணர்வு உறுப்பான மூக்கின் வழியே அது வெளியேற்றும்.கண்டிப்பாக நாம் பொறுமையை கடைபிடிக்க வேண்டும்.

EX 1    LI 4  LI  7 LI 19  LI 20  SP10  K3  REN  17   DU26

இந்தப் புள்ளிகளைத்  தூண்டும்போது மூக்கினுள் உள்ள சளி சவ்வுப் படலத்தில் அழற்சி ஏற்பட்டிருத்தல் , இதன் காரணமாக தும்மல் , மூக்கில் நேர் வடிதல் , கண் அரிப்பு, மூக்கில்  நீர் வடிதல் , மூக்கரிப்பு இவைகள்  குணமாகும். நீங்கள் நலமாக வாழ 8  புள்ளிகள்.........

நீங்கள் தினமும் ஒரு எட்டு புள்ளிகளைத்  தூண்டினாலே  போதும். கண்டிப்பாக  இவைகளை முறையான பயிற்சி பெற்ற பின்னர் தகுந்த தெரபிஸ்ட் வசம் கன்சல்ட்  செய்து செய்வது உகந்தது.

LI 4

கட்டை விரலையும் ஆள்காட்டி விரலையும் சேர்க்கும்போது தெரிகின்ற திரண்ட தசையின் மேல் பகுதியில் உள்ளது.
___________________________________________________________________________________மணிக்கட்டுரேகையிலிருந்து2  சுன்கள் மேலே இருதசைனார்களின் நடுவில் உள்ளது.
_________________________________________________________________________________________________

TW5

மணிக்கட்டு பின்புற ரேகையிலிருந்து இரண்டு சுன் மேலே உள்ளது.


____________________________________________________________________________________


ST36  இது டிபியா எலும்பின் தலைப்பாகத்தில் துருத்தியிருக்கும் முன்புற முனைக்குக் கீழே ஒரு சுன் பக்கவாட்டில் உள்ளது. இது ஒரு முக்கியமான சக்தியூட்டும் புள்ளி.நோய் எதிர்ப்பு  சக்தியை தூண்டக்கூடியது.
____________________________________________________________________________________
LIV  3  1 வது  மற்றும் 2 வது கால்  விரல்கள் சேரும்
 இடத்தின் மேலே அமைந்துள்ளது
____________________________________________________________________________________
K 3  உள்பக்க கணுக்கால்  மூட்டிற்க்கும்,குதிகால் நரம்பிற்க்கும், இடையில் அமைந்துள்ளது.
_____________________________________________________________________________________


SP6  இது உள்பக்கக்   கணுக்கால் மூட்டின் கீழ் விளிம்பிலிருந்து மூன்று சுன் டிபியா எலும்பின் உட்பக்க ஓரத்தில் உள்ளது. இது ஒரு
tonification  மற்றும் Immunity  புள்ளி.
____________________________________________________________________________________