Thursday, 31 May 2012

டெங்கு காய்ச்சல்


டெங்கு காய்ச்சல் என்றால் என்ன?


மழைக்காலத்தில் நாம் கண்டு பயப்படும் இன்னொரு நோய் டெங்கு காய்ச்சல். அறுபதுகளின் துவக்கத்தில் ‘டிங்கி’ ஜுரம் என அறிமுகமான  ‘டிங்கி’ என்ற பெயரால் பல நகைச்சுவைத் துணுக்குகள் உருவாயின. ஆனால், அதன் சரியான பெயர் ‘டெங்கு’ என்பதே.

இந்நோய் ஏற்படக் காரணமாக உள்ளது டெங்கு நுண்ணியே. (நுண்ணி என்பது வைரஸ்தாங்க.... தமிழ்மொழி பெயர்ப்பாளர்கள் நுண்கிருமி என்றால் பாக்டீரியா, அதிநுண்கிருமி என்பது வைரஸ் அதாவது நுண்ணி என்கிறார்கள்)

இவை ஊன்நீர் வகைகளாகப் (Serotypes) பிரித்தால் நான்கு வகைப்படும். அதில் என்ன விசேஷம் என்கிறீர்களா? அதைப் பிறகு சொல்கிறேன். இவை வயது, பால், இனம் ஆகிய வேறுபாடு பார்க்காமல் எல்லோரையும் ஒன்றாகத் தாக்கும்.

இவற்றைப் பரப்பும் கொசுக்களை ‘ஈடஸ் ஈஜிப்டை’ என்கிறார்கள். இவை பகல் நேரத்தில் கடிப்பவை. அதனால் நமக்குத் தெரியும். மழை நீரில் அல்லது குளிர்சாதனப் பெட்டி (ரிஃபிரி ஜிரேட்டர்), ஏ.சி ஆகியவற்றில் தேங்கும் சிறிதளவு நீரில்கூட கொசுக்கள் முட்டையிட்டுப் பெருகிவிடும். நகர்ப்புறங்களில் சிறு பாத்திரங்களில் இவை பெருகி, நோயைப் பரப்புகின்றன.
சாதாரணமாக, மருத்துவர்களிடம் ஜுரம் என்று போனால் மழைக்காலத்தில் ‘‘இதெல்லாம் வைரஸ் ஃபீவர் (viral fever)’’ என்பார்கள். ‘‘அதுக்குப் போய் ‘டெஸ்ட்’ எல்லாம் பண்ண வேண்டாம்.... போய் மாத்திரை சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க!’’ என்பார்கள்

அந்த ‘வைரஸ் ஃபீவர்’ தான் டெங்கு. பொதுவாக ஒரு நாள் காய்ச்சலுக்கே, என்ன சோதனை செய்யலாம் என வரைமுறைகள் உள்ளன. நம் ஊரில் ‘‘எதுக்கும் எல்லாம் பாத்துடலாமே, டாக்டர்’’ என்று நோயாளிகள் தாமே முடிவு செய்வது தவறு.

முதல் நாள் காய்ச்சலில் ஒரே ஒரு சோதனை போதும். (உச்சி முதல் பாதம் வரை மருத்துவர் சோதித்தாலே பல முறை காரணம் புரியலாம்). குளிர் அல்லது கடுமையான தலைவலி ஏற்பட்டால் மலேரியா உள்ளதா எனச் சோதிக்கலாம். அது ஒன்று மட்டுமே ‘பாசிட்டிவ்’ ஆக இருக்கக் கூடும்.

டெங்குதானா என உறுதி செய்வது, அவசியமற்றது. அதற்கென பணம் செலவழிப்பது வீண். ஏனெனில், டெங்கு காய்ச்சலுக்கென தனிப்பட்ட மருந்துகள் ஏதும் கிடையாது. வெறும் பக்கபலம் தரும் சிகிச்சை மட்டுமே போதும். மேலும் 15 வயதுக்குட்பட்டோருக்கு மட்டுமே _ அதிலும் 5% க்கும் குறைவானவர்களுக்கு மட்டுமே உயிருக்குத் தீங்கு ஏற்படும் அளவு பாதிப்பு ஏற்படலாம்.
  • இது ஒரு வைரஸ் கிருமியினால் ஏற்படும் காய்ச்சல்.
  • இவ்வகை காய்ச்சல் ஏடிஸ் இஜிப்டி வகை கொசு கடிப்பதினால் பரப்பப்படுகிறது.
  • இவ்வகை கொசு கடித்த 5 அல்லது 6 நாட்கள் கழித்து இந்த காய்ச்சல் ஏற்படுகிறது.
  • இவ்வகை காய்ச்சல் இரண்டு விதத்தில் தோன்றும். ஒன்று டெங்கு காய்ச்சல், மற்றொன்று இரத்தப்போக்குடன் கூடிய டெங்கு காய்ச்சல்
  • டெங்கு காய்ச்சல் ஒரு மோசமான நோய், ப்ளூ போன்று சுகாதார கேட்டினை விளைவிக்கும்.
  • இரத்தப்போக்குடன் கூடிய டெங்குகாய்ச்சல் மிகவும் மோசமான நோய். இவ்வகை காய்ச்சல் மரணத்தையும் விளைவிக்கும்.
  • டெங்கு காய்ச்சல் மற்றும் இரத்தப்போக்குடன் கூடிய டெங்கு காய்ச்சல் இருக்குமோ எனத் தோன்றும் போது உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

Monday, 26 December 2011

ஆசனம்...நாம் இளமையோடும்,ஆரோக்கியத்தோடும் வாழ!!!

யோகக் கலை.... சின்ன வயசிலிருந்தே நாம் கேட்ட இந்த வார்த்தையை கண்டுக்காம, இப்போ ஏதாவது உடல் பிரச்சினை வந்த பிறகு ஆசனப் பயிற்சிக்காக எங்கெங்கோ அலைய வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. சரி காலம் கடந்த ஞானம் என்றாலும் தெரிஞ்சுக்கோங்க!
                 இன்று உலக மக்கள் குறிப்பாக அந்நிய நாட்டு மக்கள் இந்தக் கலையை மிகவும் விரும்பிச் செய்கின்றனர்.ஒரு காலத்தில் முனிவர்களுக்கு மட்டும் சொந்தமாக இருந்த கலை இரன்று பட்டி தொட்டியெல்லாம் பரவலாக பலராலும் பின்பற்றி வருவது நல்ல விஷயம்.இந்தக் கலையை நாடி வருபவருக்குக் கண்டிப்பாக ஏதோ ஒரு விஷயம் அவருக்கு நிம்மதியையும், நிவாரணத்தையும் கொடுக்கிறது.யோகாசனம் யாருக்கு யோகம் இருக்கோ அவர்தான் ஆசனம் செய்ய முற்படுவர். ஆசனம் செய்ய எந்த நிபந்தனையுமில்லை ஒல்லியான,குண்டான,வயதான,இளமையான,நம்பிக்கையுடைய , நம்பிக்கையற்ற யாருக்கும் இது கண்டிப்பாக நற்பலனைத் தரும் என்பது என் நம்பிக்கை. உண்மை.
இந்த பதிவில் எனக்குத் தெரிந்த ஆசனங்களை முறையாக எழுத ஆரம்பிக்கிறேன். குறைகளிருப்பின் அறிவுறுத்த வேண்டுகிறேன்.பிழைகளை திருத்திக் கொள்கிறேன்.
 ஆசனம் என்றால் என்ன? ஆசனம் என்ற சொல் ,சமஸ்கிருதத்திலுள்ள  'உபவேசனே' என்ற மூலச் சொல்லிலிருந்து பிறந்தது. இதற்க்கு அர்த்தம், உட்காருதல், இருத்தல் என்று பொருள்.உலகத்தின் முதல் யோகாசிரியர் பதஞ்சலி முனிவர் இதற்க்கு, இரண்டு முக்கியத் தன்மைகளைச் சேர்க்கின்றார்."ஸ்திரம்" மற்றும் "சுகம்". ஸ்திரம் என்பது விழிப்புணர்ச்சியுடன் கூடிய ஸ்திரத்தன்மையைக் குறிக்கும்.சுகம் என்பது சௌகரியத்தைக் குறிக்கும்.ஆகவே ஆசனம் என்பது நிலையான ,சுகமானதாக இருக்க வேண்டும்.                  யோகாசனத்தை தொடர்ந்து செய்வதன் மூலம் உடல் நலமடைகிறது.
 ஆரோக்கியம் பெறுகிறது.மனம் நிம்மதி அடைகிறது. ஆத்மா சக்தி பெறுகிறது. உடற்பயிற்சியினால் உடல் மாற்றம் அடைவது போல் (கை,கால் மசில்ஸ்) வெளியில் தெரியாது.ஆனால் உடலின்  உள் உறுப்புகள் உறுதியாகி , நரம்புகள், வலுவேறி ,தசை நார்களைத் திடப்படுத்தி ,இரத்தத்தை உற்பத்தி செய்து, உடலில் தேங்கியுள்ள கழிவுப் பொருள்களை வெளியேற்றி உடல் நலமாக வைக்கும் பேராற்றல் யோகாசனதிற்குண்டு.தவிர நம் உடலில் தோன்றுகின்ற வியாதிகளையும் அகற்றி,மனம் சஞ்சலமில்லாத நல்வாழ்வையும் அளிக்கிறது.
            மனிதன் நோயின்றி வாழ வேண்டுமானால் சிறப்பு உறுப்புகளான சுரப்பிகள் (கிளாண்ட்ஸ்) நன்கு செயல்பட வேண்டும்.இல்லையென்றால் பல நோய்கள் நம்மைத் தாக்கி உடல் நிலையை பாதிக்கும்.
உதாரணமாக பான்கிரியாஸ் சுரப்பி வேலை செய்யாததன் விளைவு நீரிழிவு நோய். ஆகவே ஆசனம் செய்வோம்.....ஆரோக்கியம் பெறுவோம்.
   

Thursday, 22 December 2011

வர்மக்கலையை யார் பழக முடியும்?

வர்மக்கலையை யார் பழக முடியும் என்றால் , முதலில் குரு மூலம் தான் இந்த வர்மக்கலையை கற்றுக்கொள்ள வேண்டும். தற்போது சந்தையில் கிடைக்கும் புத்தகங்களை வாங்கி அதைப் படித்து நான் வர்மம் செய்கிறேன் பேர்வழி என்று சொல்லி நிறையப் பேர் மார்க்கட்டில் வந்து விட்டனர். மரபு வழி சார்ந்த இந்தக் கலையை மிகுந்த அனுபவமும்,விடாமுயற்சியும் இருந்தால் மட்டுமே இதில்
expert  ஆகா முடியும். ஏதோ ஒன்றிண்டு வகுப்புகள் ,அரைகுறையான பயிற்சி கண்டிப்பாக பயன் தராது.
                                       நான் கற்றுக்கொண்ட  வகையில் என் குருமார்கள் தன் மகன்களுக்குகூட  இந்த கலையைக் கற்றுக் கொடுக்க முனையவில்லை. காரணம் கோபம், கர்வம், பழிவாங்கும் எண்ணம்  கொண்டவர்கள் கையில் இந்தக் கலை  சிக்குண்டால் இதன் போக்கு வேறு விதமாகச் சென்று விடும்.
          நீங்கள் இந்த மாதிரி நபர் இல்லையென்று வைத்துக் கொண்டாலும், மிகுந்த  நுண்ணறிவும், பொறுமையும், நிதானமும்,அனைத்திற்கும் மேலாக சேவை செய்யக் கூடிய எண்ணமும் இவைகளோடு எல்லாம் வல்ல இறைவன் நாட்டம் இருந்தால் உங்களுக்கு இந்தக் கலை கைகூடி வரும்.

Wednesday, 21 December 2011

நீங்கள் நலமாக வாழ 8 புள்ளிகள்.........

நீங்கள் தினமும் ஒரு எட்டு புள்ளிகளைத்  தூண்டினாலே  போதும். கண்டிப்பாக  இவைகளை முறையான பயிற்சி பெற்ற பின்னர் தகுந்த தெரபிஸ்ட் வசம் கன்சல்ட்  செய்து செய்வது உகந்தது.

LI 4

கட்டை விரலையும் ஆள்காட்டி விரலையும் சேர்க்கும்போது தெரிகின்ற திரண்ட தசையின் மேல் பகுதியில் உள்ளது.
___________________________________________________________________________________மணிக்கட்டுரேகையிலிருந்து2  சுன்கள் மேலே இருதசைனார்களின் நடுவில் உள்ளது.
_________________________________________________________________________________________________
TW5
மணிக்கட்டு பின்புற ரேகையிலிருந்து இரண்டு சுன் மேலே உள்ளது.


____________________________________________________________________________________


ST36  இது டிபியா எலும்பின் தலைப்பாகத்தில் துருத்தியிருக்கும் முன்புற முனைக்குக் கீழே ஒரு சுன் பக்கவாட்டில் உள்ளது. இது ஒரு முக்கியமான சக்தியூட்டும் புள்ளி.நோய் எதிர்ப்பு  சக்தியை தூண்டக்கூடியது.
____________________________________________________________________________________
LIV  3  1 வது  மற்றும் 2 வது கால்  விரல்கள் சேரும்
 இடத்தின் மேலே அமைந்துள்ளது
____________________________________________________________________________________
K 3  உள்பக்க கணுக்கால்  மூட்டிற்க்கும்,குதிகால் நரம்பிற்க்கும், இடையில் அமைந்துள்ளது.
_____________________________________________________________________________________


SP6  இது உள்பக்கக்   கணுக்கால் மூட்டின் கீழ் விளிம்பிலிருந்து மூன்று சுன் டிபியா எலும்பின் உட்பக்க ஓரத்தில் உள்ளது. இது ஒரு
tonification  மற்றும் Immunity  புள்ளி.
____________________________________________________________________________________


                                                
Tuesday, 20 December 2011

Running Nose. மூக்கில் நீர் ஒழுகுதல் ,ஜல தோஷம்

நாம் ஏற்கனவே  நம் உடல் இயற்கையாகவே  தன்னை சீர் படுத்தும் சக்தி கொண்டது என கண்டோம். நோய் என்பது கழிவுகளின் தேக்கம் என்பதையும், அதற்கு மருத்துவம் கழிவுகளின் தேக்கம் என்பதையும் நாம் அறிய வேண்டும். அப்போது நுரையீரலில் தேங்கியுள்ள கழிவுகளை நம் உடல் தானாகவே நீக்கும் வேலையை செய்யும்போது சில தொந்தரவுகள் நமக்கு ஏற்பட்டாலும்,நாம் பொறுமையுடன் இருக்க வேண்டும்.அப்படி நுரையீரலில் தேங்கியுள்ள கழிவுகளை அது நீராக, நுரையீரலின் வெளிப்புற உணர்வு உறுப்பான மூக்கின் வழியே அது வெளியேற்றும்.கண்டிப்பாக நாம் பொறுமையை கடைபிடிக்க வேண்டும்.

EX 1    LI 4  LI  7 LI 19  LI 20  SP10  K3  REN  17   DU26

இந்தப் புள்ளிகளைத்  தூண்டும்போது மூக்கினுள் உள்ள சளி சவ்வுப் படலத்தில் அழற்சி ஏற்பட்டிருத்தல் , இதன் காரணமாக தும்மல் , மூக்கில் நேர் வடிதல் , கண் அரிப்பு, மூக்கில்  நீர் வடிதல் , மூக்கரிப்பு இவைகள்  குணமாகும்.

Tuesday, 13 December 2011

நுரையீரல் சக்தி ஓட்டப் பாதை


 The lung meridian is a yin meridian and is paired with the large intestine yang meridian. The lung meridian governs the lungs and breathing. On the inhale, the lungs take air from the universe and turn it into energy in the body and on the exhale they expel waste from the body.
இந்த நுரையீரல் சக்தியோட்டப் பாதையில்குறைபாடுஉண்டாகும்போது ,பலவிதமான நோய்கள்ஏற்படுகின்றன.
நிமோனியா, மூச்சுத்திணறல்,பேசமுடியாத நிலை,மார்புச் சளி , கை மற்றும் கால் மூட்டு வலி, தோல் வியாதிகள்,முடி சம்பந்தப்பட்ட பிரச்சினைகள்,ஆஸ்துமா,இருமல்,மூச்சிறைப்பு,தொண்டைப்புண்,சளியினால்நெஞ்சு நிறைந்திருத்தல்,காரைஎலும்பில் மேற்குழியில்ஏற்படும்வலிகள்,தோள்பட்டை வலிகள் ,கையின் உல் வெளிப் பக்கங்களில்ஏற்படும்வலி போன்றவை.
பஞ்ச பூத விதியின்படி நுரையீரல் இறைவன் வகுத்த நியதியில், அதாவது இயல்பான நிலையில் இயங்கினால் நுரையீரல் சம்பந்தப்பட்ட எந்தவித தொந்தரவும் நமக்கு ஏற்படாது. ஆக இந்த பஞ்ச பூத புள்ளிகளை சமப்படுத்தும் போது நுரையீரலில் ஏற்படும் தொந்தரவுகளை நாம் சரி செய்ய முடியும்.

Thursday, 24 November 2011

சுரபி முத்திரை

சுரபி முத்திரையை சற்று கவனமாகச் செய்ய வேண்டும்.பேரு விரல்கள் இரண்டும் ஒன்றோடொன்று தொடாமல் இருக்க வேண்டும்.
விரல் நுனிகள் கீழ்க்கண்டவாறு தொடவேண்டும்:
வலது ஆள்காட்டி விரல் நுனி   +     இடது நடுவிரல் நுனி
வலது நடு விரல் நுனி   +   இடது ஆள்காட்டி விரல் நுனி
வலது மோதிர விரல்   +  இடது சுண்டுவிரல் நுனி
வலது சுண்டுவிரல்  +  இடது மோதிர விரல் நுனி
இதக் கொஞ்சம் கவனமாக செய்ய வேண்டும். ஆரம்பத்தில் செய்யும் போது சற்று கடினமாக இருக்கும். இது மரம் (ஆகாயம்) ,  நெருப்பு,எர்த் (மண்), மெட்டல்(காற்று), நீர்  இந்த ஐந்து மூலகங்களையும் சமபடுத்தும் ஆற்றல் இதற்க்கு உண்டு.யோகக்கலை பயில்கின்ற நபருக்கு இது மிகவும் ஏற்றது .  மனதை  அமைதிப்படுத்த விரும்புகின்ற ஒருவருக்கு அதற்க்கு முதலில் சிந்தனை தெளிவாகி உயர்ந்த எண்ணங்கள் மனதி உருவாக இந்த முத்திரை பயன்படும்.
மேலும் உடல் வலுவாகும், சிறுநீரக நோய்கள் விலக இந்த முத்திரையை ஒரு இருபது நிமிடங்கள் வரைச் செய்ய வேண்டும்.

மகா சிரசு முத்திரை

மகா சிரசு முத்திரை இதை எப்படி செய்ய வேண்டும் என்றால் கட்டை விரல் ஆள்காட்டி விரல் நாடு விரல் இவைகளின் நுனிகளை ஒன்றோடொன்று தொடவேண்டும். மோதிர விரலை மடித்து கட்டைவிரலின் அடிப்பாக சதைப் பகுதியில் மோதிர விரலின் நுனியை வைக்க வேண்டும்.படத்தை நன்றாகப் பார்க்கவும்.சுண்டுவிரல் நேராக இருக்கும்படி வைக்கவும்.
பயன்கள்:     இதனால் தலை சார்ந்த அனைத்துத் தொந்தரவுகளும் நீங்கும்.
                         தலைவலி,ஸ்ட்ரெஸ் (மன அழுத்தம்) டென்சன்  இவைகள் தீரும்.

Monday, 21 November 2011

நம் உடல் வலிகளை,நோய்களை, ஏன் உணர்த்துகிறது?

நம் உடல் இறைவனின் அருட்கொடை . இறைவன் படைத்த நியதியில் அது இயங்கும் வரை நமக்குத் தொந்தரவு இல்லை. அதற்க்கு நாம் இறைவனைத் துதித்து இயற்கையாய் வாழ வேண்டும்.நம் வேகமான வாழ்க்கை முறை நமக்கு பல தொந்தரவுகளைக் கொடுக்கும்.அப்போதும் நம் உடல் நம்மைப் பாதுகாக்க பல முயற்சிகளை மேற்கொள்ளும்.நம் உடல், ஏதாவது தொந்தரவு ஏற்ப்பட்டால் நமக்கு அதை உணர்த்தும்.  பல மொழிகளைக் கற்ற  நாம் நம் உடலின் மொழியை உணர முடிவதில்லை.
                             போதிய அளவு ஆக்சிஜனும்,போஷாக்கும் இருக்கும் வரை வலி என்பது இருக்காது.ஒரு சில இடங்களில் நாம் குறிப்பிட்ட வலியை உணர்வதர்க்குக் காரணம் போதிய ஆக்சிஜனும்,ஊட்டச் சக்தியும் அந்த இடத்தில் இல்லாமலிருப்பதே. அதற்க்குக் காரணம் அந்த இடத்தில் ஏற்பட்டுள்ள சக்தியோட்டத்  தடை தான். அந்தத் தடையை நாம் முறையாகக் கண்டறிந்து நீக்கும்போது ,பாதிக்கப்பட்ட அந்த இடத்திற்கு,இரத்தத்தின் மூலமாக போதிய ஆக்சிஜனும், ஊட்டசக்தியும் சென்றடையும், வலியும் குறையும்.மனித உடலில் கண்ணுக்குத் தெரியாத பயோ எனர்ஜடிக்  சக்தி ஓட்டப் பாதை உள்ளது. வலிகளும், நோய்களும் அந்த குறிப்பிட்ட சக்தியோட்டப் பாதையில் பேலன்ஸ் தவறும்போது உண்டாகும்.
 இரத்தமும் ,Qi என்கிற எனர்ஜியும் சமநிலையோடு இருக்கும் வரை நக்கு நோய் கிடையாது. அக்குப்பங்க்சர் இந்த Qiஎனர்ஜியை சரிப்படுத்த உதவுவதால் மருந்து ,சர்ஜரி , எதுவுமின்றி குணமாக்க உதவுகிறது.

Friday, 18 November 2011

அக்குப்பங்க்சர் ஒரு வைத்திய முறையல்ல ...அது வாழ்க்கை முறை!!!


மனித உடல் பஞ்ச பூதத்தால் ஆனது. மனித உடலில் இருக்கும் பஞ்ச

பூதங்கள் பிரபஞ்ச சக்தியிலிருந்து தனக்கு தேவையான பஞ்ச பூத

சக்தியை வாங்கி உடலை
புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்கின்றன. எப்படியென்றால்...

நம் தோலுக்கடியில் மிக துல்லியமான பாதை ஒன்று உள்ளது. இதை உயிர்ச்சக்தி பாதை என்று கூறுவார்கள். இதன் வழியேதான் பஞ்ச பூத சக்தி ஊடுருவி சென்று உறுப்புகளைச் சேரும்.
ஒவ்வொரு உறுப்புக்கும் ஒவ்வொரு நேரத்தில் மட்டுமே இந்த உயிர் சக்தி பிரதானமாய் செல்லும். உதாரணமாக நுரையீரலுக்கு அதிகாலை 3 - 5 மணி, மண்ணீ­ரலுக்கு காலை 9.11 மணி. இப்படி ஒவ்வொரு உறுப்புக்கும் குறிப்பிட்ட நேரம் வகை செய்யப்பட்டிருக்கிறது.
நாம் உண்ணும் உணவு ஜீரணம் ஆவதற்கான செரிமான செயலாக்கம் வயிற்றில் மட்டுமே நடைபெறுவதில்லை. செரிமான செயலாக்கம் ஆரம்பிக்கும் இடம் வாய். வாயில் உள்ள உமிழ்நீர்தான் செரிமானத்திற்கு பெரிதும் துணைபுரிகிறது.
உமிழ்நீரில் இருக்கும் நுண்கிருமிகள் உணவில் கலந்து செரிமான வேலையை துவங்கும். மனிதனின் உடல் பஞ்சபூத கலவை என்பதுபோல நாக்கிலும் பஞ்சபூதங்கள் இருக்கின்றன. இதனால் மிக நிதானமாக நாக்கின் எல்லா பகுதியிலும் உணவுபடும்படி முழுக்கவனம் செலுத்தி மென்று உண்ணுதல் வேண்டும்.
ஒவ்வொரு பஞ்சபூதமும் ஒரு சுவையோடு தொடர்பு உடையது. நெருப்பு- கசப்பு மற்றும் துவர்ப்பு  சுவையுடனும், மண்- இனிப்பு சுவையுடனும், காற்று -  காரச் சுவையுடனும், நீர்- உப்பு சுவையுடனும், ஆகாயம் - புளிப்பு சுவையுடனும் தொடர்புடையது.
இவைகளை நாம் புரிந்து கொண்டு சாப்பிட பழகிக் கொண்டால் குறைவாக சாப்பிட்டாலே நம் உடலுக்கு போதுமான சக்தி கிடைத்துவிடும். உதாரணமாக 6  சப்பாத்தி  சாப்பிடுபவருக்கு மூன்று சப்பாத்தியே  
 போதுமானதாக இருக்கும்.
அழகையும், ஆரோக்கியத்தையும் விரும்புகிறவர்கள் காலை உணவை 7- 7.30-க்குள் மேலே சொன்ன முறைப்படி நிதானமாக, மென்று சாப்பிட வேண்டும். சமைக்காத உணவுகள், பழங்கள், காய்கறிகள், கேரட், வெள்ளரிக்காய் மற்றும் ஊறவைத்த பருப்பு வகைகள் போன்றவைகளை காலை உணவில் சேர்க்கவேண்டும். பருப்பு வகைகளை நன்றாக அலசி முதல் நாள் இரவே மண் சட்டியில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் 7 மணிக்கு அந்த தண்­ணீரை பருகிய பின்பு ஒவ்வொன்றாக கடித்து மெதுவாக மென்று சாப்பிட வேண்டும்.
இப்படி சாப்பிட்டால் உடலுக்கு என்ன பலன்?
வயிறு பிரபஞ்சத்திலிருந்து சக்தியை காலை 7 முதல் 9 மணிவரை பெறுகிறது. அதனால் 7 மணிக்கு ஆரம்பித்து நிதானமாக 7.30-க்குள் காலை உணவை மென்று முடிக்க வேண்டும். 15 நிமிடங்கள் கழித்துதான் தண்ணீ­ர் பருக வேண்டும். பின்பு 7.45-லிருந்து காலை 11 மணி வரை தண்­ணீர் கூட பருகக்கூடாது. ஏனென்றால் மண்­ணீரல் சக்தியை உள்வாங்கும் நேரம் காலை 9.11 வரை. இது மிக அளப்பரிய சக்தியாகும். அந்த நேரத்தில் பிரபஞ்ச சக்தி அதற்கு முழுமையாக கிடைக்க, அந்த நேரத்தில் எந்த உணவும் உண்ணாமல் இருக்க வேண்டும்.
மண்­ணீரல் பஞ்சபூதத்தில் மண்ணை சார்ந்தது. மண்­ணீரல் சக்தியை பெற்று உடலில் சேமித்தால் அது நம் உடலில் இருக்கும் நச்சுக்களை முழுமையாக வெளியேற்றும். அப்படி நச்சுக்கள் வெளியேறும்போது நம் தோல் அதற்குரிய மினுமினுப்பை பெறும். அழகு தானாக வரும். இதை பின்பற்றினால் 6 மாதத்திற்குள் உடலில் நல்ல மாற்றங்கள் நிகழும்.
மண்­ணீரலின் சக்தி உடலுக்குள் பல விதங்களில் பயன்படும். ஒரு சில நேரங்கள் சாப்பிடாமல் இருந்தாலும் இந்த மண்ணீ­ரல் உடலுக்கு தேவையான சக்தியை மாற்றி கொடுக்கும். இதைதான் சித்தர்களும், முனிவர்களும் பின்பற்றினார்கள். அவர்கள் முதலில் மண்­ணீரலின் சக்தியை சேமித்து பின் வருடக்கணக்கில் தவத்தில் மூழ்கிவிடுவார்கள். அப்போது மண்­ணீரல்தான் தேவையான சக்தியை உடலுக்கு அளித்துக்கொண்டே இருக்கும்.
அது மட்டுமல்லாமல் நம் உடலில் பிற உறுப்புகள் தொய்வடையும்போது மண்­ணீரல் தன் சக்தியை அதற்கு தேவையான சக்தியாக மாற்றிக் கொடுக்கும். உதாரணமாக சிறுநீரகம் பஞ்ச பூதங்களில் நீரை சார்ந்தது. சிறு நீரக செயல்பாடு குறையும்போது மண்­ணீரல் அதற்கு தேவையான நீர் சக்தியாக மாறி உதவும்.
மதிய உணவை 1-2 மணிக்குள்ளும், இரவு உணவை 7-8 மணிக்கும் சாப்பிட வேண்டும். மென்று சாப்பிட்டு 15 நிமிடம் கழித்து தண்­ணீர் பருக வேண்டும். குறைந்தது 3 மணி நேரம் கழித்துதான் தூங்க வேண்டும். சாதாரணமாக 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை தூங்குவது நல்லது. இவ்வாறு செய் தால் அழகையும் ஆரோக்கியத்தையும் பேணலாம்.

Wednesday, 16 November 2011

அட்ரினல் சுரப்பி என்ன வேலை செய்கிறது

ளரவமற்ற அரையிருட்டுச் சந்து. நீங்கள் தனியே நடந்து போய்க் கொண்டிருக்கிறீர் கள். திடீரென ஒரு காலடியோசை உங்களைப் பின்தொடர்கிறது. திரும்பிப் பார்த்தால், முக மூடியணிந்த ஒரு மனிதன் உங்களை நோக்கி வேக வேகமாக வந்து கொண்டிருக்கிறான். தலைதெறிக்க ஓட ஆரம்பிக்கிறீர்கள். உங்களால் அப்படி ஓட முடியும் என்று அதற்கு முன் உங்களுக்கே தெரியாது.
உங்களுக்குள் பய எச்சரிக்கை மணியை அடித்து, ஓடத் தூண்டியது எது? அதுதான் `அட்ரினல்’ சுரப்பி!
சிறுநீரகங்களின் மேல் கொழுப்பு அடுக்குக் குள் பதுங்கிக் கிடக்கிறது, ஒரு ஜோடி அட்ரினல் சுரப்பி. இந்த முக்கோண வடிவ, ஆரஞ்சு நிறச் சுரப்பிகள் `அட்ரினல்’ (லத்தீன் மொழியில் `அட்’ என்றால் `அருகில்’, `ரீன்ஸ்’ என்றால் சிறுநீரகம்.) அல்லது `சுப்ரா ரீனல்’ (`சுப்ரா’ என்றால் `மேலே’) சுரப்பிகள் எனப்படுகின்றன. நெருக்கடியின்போது இவை சில ஹார்மோன்களை வெளியிடுகின்றன.
பயத்தில் தலைதெறிக்க ஓடுவது, குத்துச்சண்டை வீரரின் `நாக்-அவுட்’ குத்தில் கூடுதல் வேகம், நெருக்கடியான நிலையில் டென்னிஸ் வீரர் `எக்ஸ்ட்ரா’ சக்தியோடு பந்தை அடிப்பது எல்லாமே அட்ரினல் சுரப்பிகளின் கைங்கரியம்தான்.
***

உங்களுக்குத் தெரியுமா?

* அனைத்து `அட்ரினோகார்ட்டிகல்’ ஹார்மோன்களும் கொலஸ்ட்ராலால் ஆனவை.
* இரண்டு அட்ரினல் சுரப்பிகளும் சேர்ந்தே 10 கிராம் எடைக்கும் குறைவாகத்தான் இருக்கும்.
* உடற்பயிற்சி, ரத்தத்தில் சர்க்கரை அளவு அசாதாரணமாகக் குறைவது, ரத்தக் கசிவு, உணர்வுரீதியான நெருக்கடி போன்றவை அட்ரினல் செயல்பாட்டைத் தூண்டும்.
* அட்ரினல் சுரப்பிகள் அவற்றின் எடையை விட ஆறு மடங்கு ரத்த வினியோகத்தைப் பெறுகின்றன.
* வாழ்நாள் முழுவதும் ஹார்மோன்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படவில்லை எனில், அட்ரினல் சுரப்பிகளின் நீக்கம் அல்லது சேதம், மரணத்தை ஏற்படுத்தும்.
* நுரையீரலில் ஏற்படும் புற்றுநோய், அட்ரினல் சுரப்பிகளுக்கும் பரவுகிறது.
* ரத்த மாதிரி எடுக்க முயலும்போது அந்த நர்ஸுக்கு `கார்ட்டிசோல்’ ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கிறது.
***

அட்ரினல் செயல்பாட்டின்போது…

அட்ரினல் சுரப்பியால் `அட்ரினலின்’, `நார்அட்ரினலின்’ ஆகிய ஹார்மோன்கள் வெளியிடப்படும்போது, கீழ்க்கண்ட உடலியல் செயல்பாடுகள் நடைபெறுகின்றன…
* இதயத்துடிப்பு அதிகரிக்கிறது.
* உடலியல் வேதிமாற்ற வேகம் கூடுகிறது.
* கண் பாவை விரிவடைகிறது.
* மூச்சு வாங்குகிறது.
* ரத்த நாளங்கள் சுருங்கி அழுத்தத்தை அதிகரிக்கின்றன.
* தசைகளுக்கான ரத்த வினியோகம் அதிகரிக்கிறது.
* உறையும் நேரம் குறைகிறது.
***

சாதாரண மனிதனை `சூப்பர்மேனாக்கும்’ விஷயங்கள்…

அட்ரினலின் சுரப்பின்போது, துரிதமடையும் உடலியல் வேதிமாற்றம், இதயத் துடிப்பு, அதிகளவில் ஆக்சிஜனை உள்ளிழுப்பது ஆகியவை சட்டென்று சக்தியைப் பொங்கச் செய்கின்றன. கண் பாவை விரிவதால் பார்வைத் திறன் கூடுகிறது. ரத்தம் சீக்கிரமாக உறைவது, அதிக ரத்தக் கசிவைத் தடுக்கிறது. அதிஅவசியமற்ற செயல்பாடுகளான குடல்பகுதிச் சுரப்புகள் மெதுவாகின்றன. இவ்வாறாக, நெருக்கடியில் உள்ள ஒரு நபர் அதைச் சமாளிக்கத் தயாராகிறார்.
***

அட்ரினல் சுரப்பியின் சுரப்புகள்

சுமார் 25 விதமான ஹார்மோன்களை அட்ரினல் சுரப்பி சுரக்கிறது. அவற்றில் முக்கியமான சில…
கார்ட்டெக்ஸின் சுரப்புகள்
கார்ட்டிசோல்- ஹைட்ரோகார்ட்டிசோன் என்றும் அழைக்கப்படும் இது, பிட்யூட்டரி சுரப்பியின் அடினோகார்ட்டிகோடிராபிக் ஹார்மோனால் கட்டுப்படுத்தப்படு கிறது. கொழுப்பு வேதிமாற்றத்தைத் தூண்டுகிறது. குளுக்கோஸ் அளவையும், தண்ணீரைத் தக்க வைக்கும் திறனையும் அதிகரிக்கிறது.
ஆல்டோஸ்டீரான்- மினரலோகார்ட்டிகாய்டு எனப்படுகிறது. பிளாஸ்மா அடர்த்தியைக் கட்டுப்படுத்துவதன் மூலம் சிறுநீரகத்தின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துகிறது.
டீஹைட்ரோபியாண்ட்ரோஸ்டீரான்- இது, வயதாவதைத் தடுப்பதாகவும், பாலியல் செயல்பாட்டை மேம் படுத்துவதாகவும் கருதப்படுகிறது.
மெடுல்லாவின் சுரப்புகள்
அட்ரினலின் அல்லது எபிநெப்ரின்- நெருக்கடி நிலையில் சுரக்கிறது. சண்டையிட அல்லது தப்பியோட உடம்பைத் தயார்படுத்துகிறது.
நார்அட்ரினலின் அல்லது நார்எபிநெப்ரின்- ரத்த நாளங்களைச் சுருக்கி, ரத்த அழுத்தத்தை அதிகரிக் கிறது.
***

அட்ரினல் சுரப்பிகளின் `பொறுப்புகள்’

* உடலியல் வேதிமாற்றத்தைப் பராமரிப்பது.
* ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது.
* வீக்கத்தைத் தடுப்பது.
* மின்தூண்டல் கடத்தல் திரவச் சமநிலையைப் பராமரிப்பது.
* கர்ப்பத்தைப் பராமரிப்பது.
* பூப்படைதல், பாலியல் முதிர்ச்சியைக் கட்டுப்படுத்துவது.
***

அட்ரினல் சுரப்பி பாதிக்கப்படும்போது…

அடிசன்ஸ் வியாதி- இது `ஹைப்போஅட்ரினோகார்ட்டிசிஸம்’ எனப்படுகிறது. `கார்ட்டிசோல்’ குறைவாக உற்பத்தியாகும் நிலை. வழக்கமாக, நோய்த் தொற்றுகளாலும், தன்னியக்க நோய் எதிர்ப்புச்சக்திக் குறைபாடுகளாலும் ஏற்படுகிறது. ஒரு லட்சம் பேரில் 4 பேரை இது பாதிக்கிறது.
குஷிங்ஸ் சிண்ட்ரோம்-கார்ட்டிசோல் அதிகமாக உற்பத்தி செய்யப்படுவது. அட்ரினல் சுரப்பியில் ஏற்படும் கட்டி மற்றும் சில வேதிப்பொருட்களால் ஏற்படலாம்.
அட்ரினல் ஹைபர்பிளேசியா- குறைவான கார்ட்டிசோல் உற்பத்தி. மரபியல் காரணங்களால் ஏற்படலாம் எனக் கருதப்படு கிறது.
பிட்யூட்டரி கட்டி- எண்டோக்ரைன் சுரப்பிகளின் செயல்பாட்டை பிட்யூட்டரி சுரப்பி கட்டுப்படுத்துகிறது. பிட்யூட்டரி சுரப்பியில் ஏற்படும் எந்தச் சேதமும் அதன் அனைத்து ஹார்மோன்களையும் பாதிக்கும்.
விரிலைசேஷன்- ஆண்ட்ரோஜீன்களின் அதிக உற்பத்தியால் முரட்டுத்தனமான தன்மை ஏற்படும் நிலை.
அட்ரினல் கட்டி- இது, `பியோகுரோமோசைட்டோமா’ எனப் படும் புற்றுநோய். இந்நோய், அட்ரினலின் மற்றும் நார்அட்ரினலினை அதிகமாக உற்பத்தி செய்ய வைக்கிறது.

கால்சியம் குறைபாடு நீங்க வேண்டுமா

மனித உடலின் பெரும் பங்கு எலும்புகள். உணவு உட்கொள்வதற்கும், அழகான தோற்றத்தை அளிப்பதற்கும் பற்கள் தேவை. இவை நன்றாக இருக்க வேண்டும் என்றால் இவற்றிற்கு கால்சியம் தேவை.
கால்சியம் என்பது சுண்ணாம்பு. எலும்புகளும், பற்களும் கால்சியம் பாஸ்பேட் எனும் பொருளினால் அமைந்தவை. ஆகவே கால்சியம் எனும் சுண்ணாம்புப் பொருள் நமது உடல்நலத்துக்கு அவசியமானது.
கால்சியம் எலும்புகளையும், பற்களையும் வளர்த்து பலப்படுத்துவதோடு வேறு பல வேலைகளையும் செய்கிறது. இடைவிடாது வேலை செய்துக் கொண்டிருக்கும் இதயம் நன்றாக வேலை செய்வதற்கும் கால்சியம் உதவி செய்கிறது.
மேலும், நரம்புகளுக்கும், இரத்தத்திற்கும் கால்சியம் தேவைப்படுகிறது. தேவையான அளவு கால்சியம் உடல் இல்லையென்றால் எலும்புகள் உறுதியுடன் இருக்காது. எலும்புத் தேய்மானம் ஏற்பட்டு பல பிரச்சனை உண்டாகும். பற்களும் விரைவில் சொத்தைப் பட்டு அகற்ற வேண்டிய நிலைக்கு வரும்.
வளரும் குழந்தைகளின் உடம்பில் போதுமான கால்சியம் இல்லையென்றால் எலும்புகள் மென்மையடைந்து வளர்ச்சி குன்றிவிடும். இதய நோயும் உண்டாக வாய்ப்புள்ளது.
குறிப்பாக கருத்தரித்த பெண்களும், குழந்தைப் பெற்ற தாய்மார்களும் கால்சியம் உள்ள உணவை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
கால்சியம் சத்துள்ள உணவுப் பொருட்கள் வருமாறு:
பால், மோர், முட்டையின் மஞ்சள் கரு, முளைக் கீரை, முருங்கைக் கீரை, பருப்பு வகைகளில் கால்சியம் உள்ளது.
தாம்பூலம் போடுவது நமது நாட்டுப் பழக்கம். தாம்பூலத்துடன் சுண்ணாம்பு சேர்ந்துள்ளது. அதன் சாற்றை விழுங்குவதன் மூலம் உடம்பில் கால்சியம் சேர்கிறது.
கேழ்வரகு (ராகி), சோளம், கோதுமை, தவிடு உள்ள அரிசி, உருளைக்கிழங்கு, முள்ளங்கி, பீட்ரூட், காரட், இறைச்சி ஆகியவற்றிலும் ஓரளவிற்கு கால்சியம் இருக்கிறது.

Tuesday, 15 November 2011

Monday, 31 October 2011

அபான முத்திரை

அபான முத்திரையை  மேலே உள்ள படத்தில் இருப்பதைப் போல செய்ய வேண்டும்.
அதாவது மோதிர விரலையும், நடு விரலையும் கட்டை விரலோடு  லேசாகத் தொடவேண்டும். இதனால் என்ன பயன் நமக்குக் கிடைக்கிறதென்றால்,
சிறுநீரகம், மலக்குடல், பிறப்புறுக்கள் நன்கு வேலை செய்வதோடு, சுகப்பிரசவம் தரும், கர்ப்பப்பை , மாதவிடாய் கோளாறுகளை நீக்கவல்லது. பைல்ஸ், நீரிழிவு நோய் உள்ளவர்கள் இதை தொடர்ந்து செய்வதால் அவற்றின் தாக்கத்திலிருந்து நிச்சயம் விடுபடலாம்.
நேர அளவு: எவ்வளவு நேரமும் செய்யலாம். இதய மற்றும் உயர் அழுத்த நோய் உள்ளவர்கள் ஒவ்வொரு நாளும் இருதடவைகள் 15 நிமிடங்களுக்குச் செய்து வருதல் மிக்க சிறப்பைத் தரும்.
பலன்: இதயத்திற்கு அனுகூலத்தைத் தரும். ஒரு ஊசி மருந்தினைப் போல மார்படைப்பினைக் குறைக்க உதவும். மேலும் வாயுவை உடலில் நீக்க உதவும்.
� இதயத்தை வலுப்படுத்தி இதயதுடிப்பைச் சீராக்கும்.
� கழிவுத் தொகுதியை ஒழுங்குபடுத்தும்

குறிப்பு: இதை கர்ப்பிணிகள், முதல் 8 மாதம் வரை செய்யக்கூடாது.

Thursday, 27 October 2011

' போதி தர்மர்' தமிழ் குடியின் இன்னொரு வைரக் கிரீடம்

சூர்யாவின்முப்பரிமாண நடிப்பில் விரைவில் வெளி வரும் 'ஏழாம் அறிவு’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் போதி தர்மர் என்ற யோகியின் கதாபாத்திரம். அந்த போதி தர்மர் கதாபாத்திரம் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு காஞ்சிபுரத்தில் பிறந்த ஒரு தமிழனுடைய வரலாற்றைச் சொல்கிறது. அவரின் சரித்திரத்தைக் கொஞ்சம் பார்ப்போமா..

போதி தருமன் - 1887ஆம் ஆண்டு யோஷிடோஷி என்ற கலைஞரால் வரையப்பட்ட ஒரு படம்


காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த பல்லவ மன்னனான கந்தவர்மன் IV-க்கு மூன்றாவதாகப் பிறந்த குழந்தைதான் போதிதர்மர். இவரின் இயற்பெயர் புத்த வர்மன்(பௌத்தவர்மப் பல்லவன்).  கந்தவர்மன் IV-னின் மூன்று மகன்களென அறியப்படுவோர்:

1. நந்திவர்மன் I
2. குமாரவிஷ்ணு II
3. புத்தவர்மன் (போதிதர்மா) (பௌத்தவர்மப் பல்லவன்)

அக்காலத்தில் பல்லவ வம்சத்தில் பிறந்த கடைசிக் குழந்தையை புத்த மதத்திற்கு அர்ப்பணிப்பது மரபு. எனவே  பல்லவ மன்னன் கந்தவர்மன் IV, மகனின் குருகுல வாழ்க்கைக்காக பிரஜ் என்கிற சமய குருவிடம் சேர்த்திருக்கிறார் . இவர் காஞ்சியில் தங்கி பௌத்த சிந்தனைகளைப் பரப்பி வந்தவர். சிறுவன் போதியின்  அபார ஞானத்தைப் பார்த்து பிரமித்த பிரஜ், தனக்கு அடுத்த வாரிசாக 28வது குருவாக போதியை  நியமிக்கிறார். காலப்போக்கில் போதி தர்மர் காஞ்சிபுரத்திலிருந்தபடியே பல கலைகளைக் கற்றுத் தேர்கிறார்.  இதில் களறி, வர்மம் போன்ற அதிரடிக் கலைகளும் உண்டு. காஞ்சியிலிருந்து நாலந்தா சென்று அங்கிருந்து கி.பி.526-ல் தெற்கு சீனாவிற்குச் செல்கிறார் போதி தர்மர்.போதிதர்மாவின் காலம்  கி.பி.475-550 என்று பதிவுகள் கூறுகின்றன.
சென்னையை அடுத்த காஞ்சிபுரத்தில் பிறந்தவர்தான் இந்த போதிதர்மர். மூன்று ஆண்டுகளாக காஞ்சிபுரத்தில் இருந்து சீனாவிற்கு நடைபயணமாக சென்ற போதி தர்மர், மார்சியல் ஆர்ட் என்ற தற்காப்பு கலையை சீனர்களுக்கு சொல்லிக்கொடுத்தவராம். இப்போது சீனாவில் எங்கு திரும்பினாலும் போதி தர்மரின் சிலை உள்ளதாம். ஐந்து வயது சிறுவர்களிடம் கேட்டாலும் அவரைப்பற்றி சொல்கிறார்களாம். அந்த அளவுக்கு சீனாவில் தெய்வமாக மதிக்கப்படும் ஒரு தமிழர் போதி தர்மர். ஆனால் அவருக்கு காஞ்சிபுரத்தில் ஒரு சிறிய சிலை மட்டுமே உள்ளதாம். மற்றபடி அவரைப்பற்றிய எந்த தகவலும் இங்கிருப்பவர்களுக்கு தெரியாது. அந்த அளவுக்கு ஒரு தமிழனின் வரலாறு மறைக்கப்பட்டிருக்கிறது என்பது கவலைக்குரிய விசயம்

அன்றைய சீனப் பேரரசராக இருந்தவர் "லியாங் வு டீ".புத்த மதத்தில் கொண்ட ஈடுபாட்டால் பௌத்த  ஆலயங்களையும் விகாரங்களையும் நிறுவிய சீனப் பேரரசர். தமிழகத்திலிருந்து வந்த புத்தத் துறவியான  போதி தர்மரை கேள்விப்பட்டு மிகுந்த மரியாதையோடும், அன்போடும் உபசரித்து சீனாவில் தங்கிவிட  வேண்டுகிறார். அங்கு ஷாஓலின் என்ற இடத்தில் தங்கி பௌத்த மதத்தைப் பரப்பிய போதி தர்மர், தமிழகத்தில் தான் கற்ற கலைகளையும் சீனர்களுக்குப் பயிற்றுவித்தார். அப்படி போதிதர்மர் கற்றுக் கொடுத்த கலைகளில் ஒன்றுதான் குங்ஃபூ.
போதி தர்மரைப் பற்றி வேறு சில வரலாறுகளும் இருக்கின்றன.
அவர் சீனாவில் தொடர்ச்சியாக ஒன்பதாண்டுகள் தியானத்தில் இருந்தாராம். ஒரு சுவற்றை நோக்கி அமர்ந்துகொண்டு அதனையே பார்த்தவண்ணம் இருந்தாராம். ஆரம்பத்தில் தூக்கம் வந்ததாம். ஆகவே தம்முடைய கண்களின் மேல் இமைகளை எடுத்து தூக்கி எறிந்துவிட்டாராம். அந்தவண்ணம் அவர் கண்களை மூடாமல் தூங்காமல் இருந்தாராம்.
அந்த இமைகள் விழுந்த இடத்தில் ஒரு செடி முளைத்ததாம். அந்தச் செடியின் இலைகள் காய்ந்து உலர்ந்து சருகுகளாக அங்கே கிடந்தனவாம்.
ஒரு புத்த பிட்சு ஒருமுறை திறந்த வெளியில் அந்தச்செடி இருந்த இடத்திற்கு அருகில் அமர்ந்து ஏதோ படித்துக் கொண்டிருந்தாராம். அவர் எப்போதுமே வெந்நீர்தான் குடிப்பவர். அந்த வெந்நீர்ப் பாத்திரத்துக்குள் அந்தச் செடியின் சருகுகள் காற்றால் அடித்துக்கொண்டுவரப்பட்டு விழுந்துவிட்டனவாம். நீரை வீணாக்க விரும்பாத புத்தபிட்சு, அந்தச் சருகுகளை எடுத்தெறிந்துவிட்டு, அந்த வெந்நீரைப் பருகினாராம்.
அதனைப் பருகியதும் உடல் சுறுசுறுப்பாகவும் மனது தெளிவாகவும் இருந்ததாம். அதுவரைக்கும் அழுத்திக்கொண்டிருந்த சோம்பல் தூக்கம் ஆகியவை சென்ற இடம் தெரியாமல் ஓடி மறைந்துவிட்டனவாம்.
அந்தச்செடியை ஆராய்ந்து பர்த்துவிட்டு, அதன் இலைகளைப் பானமாக்கி குடிக்கும் வழக்கத்தைத் தாமும் மேற்கொண்டு விட்டு சீனாவிலும் அந்த பிச்சு பரப்பிவிட்டாராம். அப்படித் தோன்றியதுதான் தேயிலையாம்.
போதிதர்மர் சீனாவில் இருந்த காலத்தில் புத்தபிட்சுகள் பிச்சை எடுத்துக்கொண்டு பலவீனமானவர்களாகவும் சமுதாயத்திற்கே பாரமாகவும் இருந்தார்கள். மற்றவர்களால் துன்புறுத்தப்பட்டுக் கொண்டு பயந்தே வாழ்ந்திருந்தார்கள்.
ஆனால் போதிதர்மர் தம்முடைய சீடர்களுக்கு மூச்சுப்பயிற்சியின் சில நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுத்தார்.
அந்தப் பயிற்சிகளின் மூலம் மனதின் இயக்கத்தையும் உடலின் செயல்பாட்டையும் அடக்கமுடியும். இன்னொரு பயிற்சியின்மூலம் உடலை வலுவாக்கி அசுரபலத்தைப் பெறமுடியும். மனதை தீட்சண்யமாகச் செயல்படுத்த முடியும்.
உடற்பயிற்சிகளையும் சொல்லிக் கொடுத்தார்.
அவர்களுக்கு விவசாயம், சிறுதொழில்கள் போன்றவற்றைச் செய்யச் சொல்லிக்கொடுத்தார். தங்களது கோயில்களைச்
சுற்றிலும் தங்களுக்குத் தேவையான உணவை அவர்களே விளைவித்துக்கொண்டார்கள். சமுதாயத்திடம் பிச்சையெடுப்பதில்லை.
உடல் உறுதி அசுரபலம் ஆகியவற்றைக்கொண்டு சில தற்காப்பு முறைகளயும், தாக்குதல் முறைகளையும், ஆயுதங்களிலிருந்து பாதுக்காத்துக்கொள்ளும் முறைகளையும், உடலில்காயம் ஏற்படாமுறைகளையும் கற்றுக்கொடுத்தார்.
பிற்காலத்தில் புத்தபிக்குக்கள், சமுதாயத்தின் உழைப்பின் பலன்களையெல்லாம் பிடுங்கித் தின்றுவிடுகிறார்கள் என்ற ஆத்திரத்தோடு சீனச்சக்கரவர்த்திகள் சிலர், பிக்குக்களை அடித்துக் கொல்வித்தபோது போதிதர்மரின் சீடபரம்பரையும் கோயில்களும் மட்டும் தப்பின.அவ்வாறு போதிதர்மர் தோற்றுவித்த பௌத்தக்கோயில்களை ஷாஓலின்(Shaolin) கோயில்கள் என்பார்கள்
.
இந்தப் படத்தைப் பார்க்கும்போது தன கண் இமைகளைத்  தியானத்தில் ஒன்பதாண்டுகள் இருக்கும்போது ,தூக்கம் வராமலிருக்க  தூக்கி எரிந்து விட்டதை அறிய முடிகிறது .

Wednesday, 26 October 2011

பிரித்திவி முத்திரை

பிரித்திவி முத்திரை எப்படி செய்வது என்று பார்ப்போம் .


பிரிதிவி முத்திரை

பிருத்திவி முத்திரை- மோதிர விரல் நுனியால் கட்ட விரல் நுனியை தொடவேண்டும் . இப்படிச் செய்வதால்  – உடலையும் உள்ளத்தையும் புதுப்பிக்கிறது. மன அமைதியை உண்டாக்கும். உடலை பருமனாக்கும்.
இது உங்கள் மேனி எழிலுக்கும்,தோல் நிறத்துக்கும் உதவுகிறது. 
இந்த முத்திரையை மதியம் உணவுக்கு முன்பு ஒரு இருபது நிமிடங்கள்  செய்துவிட்டு சாப்பிடவும். பிறகு அந்த நாள் முழுவதும் உங்கள் சுறுசுறுப்பைப் பாருங்கள் உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும்.காலையில் செய்யும்போது உங்களுக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைத்துவிடும்.நீண்ட நாள் நோயால் பாதிப்படைந்த நபர்களுக்கு இது ஒரு டானிக் மாதிரி.
மொத்தத்தில் அக்குப்பங்க்சர் பார்வையில் இது மண் மூலகத்தைச் சமன் படுத்தும் வேலையைச் செய்யும்.

Thursday, 20 October 2011

வாயுவைச் சமன்படுத்தும் முத்திரை  
சரி எனக்கு மெட்டல் என்கிற காற்று மூலகம் அதிகமா,குறைவா என அறிய முடிவில்லை என்கிறீர்களா . நீங்கள் வாயுவைச் சமன்படுத்தும்
முத்திரையைச்
செய்துகொள்ளுங்கள்.இந்த முத்திரைகளை சுகாசனம் ,சித்தாசனம் ,பத்மாசனம், இவைகளுள் ஏதாவதொரு இருப்பில் அமர்ந்து செய்ய வேண்டும். வஜ்ராசனம் சிறப்பு வாய்ந்தது. தொடர்ந்து பத்து நிமிடம் செய்ய வேண்டும்.ஆரம்பத்தில் ஐந்து நிமிடம் செய்து பிறகு பத்து நிமிடம் செய்யலாம். பத்து நிமிடத்திற்கு மேல் செய்ய வேண்டாம்.

காற்று என்கிற மூலகம் குறைவாக இருந்தால் செய்ய வேண்டிய முத்திரை 


 
இந்த முத்திரையை நமது ஆள்காட்டி விரலை மடித்து அதன் முதல் ரேகை அதாவது ஆள்காட்டி விரல் நகத்தின் மீது  கட்டை விரலை வைத்து மெதுவாகத் தொடவேண்டும்.
இந்தமாதிரி செய்யும்போது மெட்டல் என்கிற காற்று குறையும்போது ஏற்படும் பிரச்சினைகளான உடல் அசதி ,மந்தத்தன்மை ,மூச்சு விடுவதிலுள்ள சிரமம் ,எக்சிமா ,நெஞ்சை அடைப்பது போன்ற உணர்வு  இவைகள் மறையும்.


 METTAL(காற்று)மூலகம் அதிகமாக இருந்தால் செய்ய வேண்டிய முத்திரை

 காற்று மூலகம் நம்முடைய உடலில் அதிகமாக இருக்கும்போது என்னென்னதொந்தரவுஏற்படும், குறைந்தால் என்ன மாதிரி இருக்கும் என்பதை 
 நாம் உணர வேண்டும். அக்குப்பங்க்சர் நோக்கில் பார்க்கும்போது மெட்டல் மூலகம் குறைந்தால்
 தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ,
சுவாசிப்பதில் சிக்கல்,
ஆஸ்த்மா ,
சுவாசம் சம்பந்தப்பட்ட வியாதிகள் உண்டாகும்.
       அதே நேரம் மெட்டல் மூலகம் அதிகமாகிப் போனால்
 செரிமானக் குறைபாடு ,
மூட்டு வலி,
முதுகு, கழுத்துப் பகுதிகளில் உண்டாகும் வலி,
அடிக்கடி ஏப்பம் ,
வயிற்றுபகுதி உப்புதல் ,
இந்த மாதிரி நோய்கள் உண்டாகும்.

காற்று என்கிற மெட்டல் அதிகமிருந்தால் இந்த முத்திரை செய்ய வேண்டும்
நம்முடைய ஆள்காட்டி விரலை மடித்து , நம்முடைய கட்டை விரலைக் கொண்டு ஆள்காட்டி விரலின் இரண்டாவது ரேகையின் பின்புறம் லேசாக வைத்து  தொட வேண்டும்.அதிக அழுத்தம் தேவையில்லை.சுவாசத்தை ஆழமாக அதே நேரத்தில் சீராக வைத்து , நம் கவனத்தை இந்த முத்திரை.யின் மேல் வைக்க வேண்டும்.இந்த முத்திரையைச் செய்யும்போது நம்முடைய காற்று மூலகத்தைக் குறைக்க முடியும.
இந்த முத்திரை உடனடியாக வயிற்றில் நிறைந்துள்ள அதிகப்படியான  வாயுவை வெளியேற்றிவிடும்.

மூட்டு வலி ,எலும்பு ஜாயிண்ட்ஸ் வலி இவற்றை நீக்கும் .
வாத வழிகளால் பாதிக்கப்பட்ட அனைவரும் இந்த முத்திரையால் பலன் பெறலாம் .
சின்னச் சின்னப் பிரச்சினைகளைக் கூட பெரியதாக்கி மனதளவில் துயரப்படுபவர்களுக்கும்,எளிதில் உணர்ச்சி வயப்படுபவர்களுக்கும்,மன உறுதியைக் கொடுக்கும்.தலைசுற்றல் , தூக்கமின்மையைச் சரி செய்யும் .
வாத தோஷத்தினால் ஏற்ப்படக்கூடிய முதுகு வலி, மற்றும் சைனோவியல் திரவம் சுரப்புக் குறைவினால் எலும்பு இணைப்புகளில் உண்டாகும் வலி, மற்றும் படக்,படக் என்ற சத்தம் இவைகளுக்கு நல்ல பலன் தரும்.
விக்கலைக்குறைக்கும்
ஓரளவு காது தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு தருவதோடு,தேவையில்லாமல் கண் இமைகள் துடிப்பதை சீராக்கும்.
தோலின் மென்மைக்கும்,மேன்மைக்கும் இந்த முத்திரை உகந்தது.

Tuesday, 20 September 2011

காற்று மூலகம் METTAL ELEMENT

மெட்டல் என்கிற  காற்று மூலகம்
                                                            காற்று  இல்லாமல் நம்மால் கண்டிப்பாக உயிர் வாழ முடியாது.இன்று அநேகப் பேர்  ஏன் அனைவருமே மூச்சு என்கிற விஷயத்தை நினைப்பதேயில்லை. பொத்தாம் பொதுவாக மூச்சு முக்கியம் என்று சொன்னாலும், அதை எப்படிப் பயன்படுத்துவது என்பதை அறிய முனைவதில்லை. ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்வதில்லை.இறை ஞானிகள் அதைக் கற்றுத்தேர்ந்தவர்கள். மூச்சுக்காற்றை அடக்கி ஆளத் தெரிந்தவர்கள். நாம் அந்த அளவு தெரிய வேண்டியதில்லை,கொஞ்சம் முறையான சுவாசம் செய்யத் தெரிந்தாலே ஆரோக்கியம் நமக்குச் சொந்தம்.நீண்ட மூச்சு உள்வாங்கி, நீண்ட மூச்சாக வெளிவிடவேண்டும். பொதுவாகவே நம் அவசரகதி வாழ்க்கையில் வேகமான சுவாசமே அன்றாடம் நடக்கிறது. நாம் உள்ளிழுக்கும் காற்றானது நம் நுரையீரலை முழுமையாக அதன் அடிப்பகுதி நுண்ணறைகள் வரை செல்கிறதா என்றால் , கண்டிப்பாக இல்லை. இந்த மண்ணெண்ணெய்  பம்ப் ஸ்டவ்வில் எப்படி காற்றடிப்போமோ அந்த மாதிரி பொசுக்,பொசுக் என்று தான் மூச்சு விடுகிறோம் . நாம் இழுக்கும் காற்று நுரையீரல் வாயில் (entrance) வரை சென்று ,வெளியேறிவிடுகிறது. காரணம் படபடப்பு ,பதட்டம், ஓட்டம் .பணம் பண்ணவேண்டும் ,பணம் பண்ணவேண்டும் என்ற ஓட்டம்.நம்முடைய உடலின் கடைக்கோடி ஒவ்வொரு அணுவுக்கும் உண்டான ஆக்சிஜன் கிடைத்ததா என்று உணர மறந்துவிட்டோம்.முடிவில் நோய் ,வாழும் வயதில் மரணம் .இதற்க்கு யார் காரணம் . நாம், நம் மனம்.
"நான் உன்னைப் படைத்ததே என்னை வணங்குவதற்கன்றி வேறெதற்காகவும் இல்லை"
                              இறைவன் சதாசர்வ காலமும் தன்னை  நினைப்பதற்கும் வணங்குவதற்கும் தான் மனிதனாகிய உன்னைப் படைத்தேன்.அதாவது இறையைத்தேடு என்கிறான் .நமக்கு இந்த வல்லினம் ,மெல்லினம்,இடையினத் தகராறு எப்போதும் இருப்பதால் நாம் இறைவனைத் தேடாமல் இரையைத் தேடி ஓடுகின்றோம். இந்த அவசரமான ஓட்டம் நிறைந்த இந்த வாழ்க்கை முறையில் முறையான சுவாசம் என்பது நினைத்துப்பார்க்க முடியாத ஒன்று. உணர்ந்தவர்கள் முறையாகச் செய்து ஆரோக்கிய வாழ்க்கையைப் பெறுகின்றனர். நம் உடலில் உயிர் என்பது பஞ்சபூதக் கலவை என்று முன்னர் கண்டோம். இந்த பஞ்சபூதங்கள் எங்கே இருக்கிறதோ அங்கே உயிர் நலமாக இருக்கும். பஞ்ச பூதம் ஒன்றில் குறைவு ஏற்ப்பட்டாலும் நம் உயிருக்கு நலம் கெடும் என்பது உறுதி.
                                                         அப்போ , இந்த காற்று என்கிற மூலகத்தை நாம் எப்படிக் கையாள்கிறோம் என்பதை கண்டிப்பாக நினைத்துப்பார்க்க வேண்டும். மீண்டும் முத்திரையோடு சந்திக்கிறேன்......
                                                                              

Tuesday, 6 September 2011

முத்திரைகளை எப்படிச் செய்ய வேண்டும்?

முத்திரைகளை எப்படிச் செய்ய வேண்டும், என்பதை இப்போது காணலாம்.நமது ஒவ்வொரு விரலும் ஒரு மூலகத்தை சார்ந்திருக்கிறது, தேவைக்கேற்ப விரல்களை தொடுவதன் மூலம் நம் உடலின் பஞ்ச பூத சமன்பாட்டை நேர்படுத்தி நோயிலிருந்து முழுமையாக் விடுபடலாம்.
                                  கழிவுகளின் தேக்கம் நோய்.அப்படியானால் கழிவுகளின் நீக்கமே மருந்து. எனவே கழிவுகளை முழுமையாக நீக்கிவிட்டால் நம் உடல் ஆரோக்கியமாக மாறிவிடும் என்பதில் ஐயமில்லை.அதனால் ஆரோக்கியமாக வாழ நினைப்பவர் முதலில் இந்த முத்திரையைத் தொடர்ந்து ஒரு பதினைந்து நாட்கள் செய்ய வேண்டும். அதாவது ஒரு அம்மாவாசை நாளில் ஆரம்பிக்க வேண்டும். வளர்பிறை நாட்களில் செய்தால் நல்ல பலன் கிட்டும்.
                                                          இதற்குப் பெயர் கழிவுநீக்க முத்திரை
 கட்டைவிரலின் நுனிப்பகுதியால்
மோதிரவிரலின்  கீழ அதாவது மூன்றாவது ரேகை உள்ள இடத்தை தொடவும்.மெல்லிய அழுத்தம் போதுமானது.சம்மணம் ,பத்மாசனம், சித்தாசனம் இந்த நிலையில் சுவாசத்தை சாதாரணமாக நிலையில் வைத்து அதை கவனித்து வரவேண்டும்.ஒரு ௨௦நிமிடங்கள்செய்யும்போதுஉடலின்கழிவுகள்வெளியேறஆரம்பிக்கும்.அப்போதுசிறுநீர்அதிகம்போவது,அதில்வாடைவீசுவது,மலம்அதிகவாடையுடன்அடிக்கடிபோவது,கறுத்துமலம்வெளியேறுவது.வியர்வைஅதிகம்வெளியேறுவது ,அதில்வாடைவீசுவது,பேதிஉண்டாவது, இந்த அறிகுறிகள் அனைத்தும் கழிவு நம் உடலைவிட்டு நீங்குவதாக அர்த்தம். பின்பு மூன்று மாதங்களுக்கொருமுறை ஏழுநாட்கள் தொடர்ந்து செய்தால் கழிவுகள் மீண்டும் சேராது.

Monday, 5 September 2011

நோய் தீர்க்கும் முத்திரைகள்

முத்திரைகள் நமது முன்னோர்களின் இறை ஞானத்தின் மூலம் உணர்ந்து கொள்ளப்பட்ட ஒரு விஷயம். நல்விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய,நம் உடலின் நோய்களை தீர்க்கக்கூடிய வல்லமைகொண்ட அற்புதங்களை நிகழ்த்தும்  ஒரு  முறை. அன்றாடம் நம் வாழ்வில் தேவைப்படும் சமயத்தில், தேவைப்பட்ட முத்திரைகளைச் செய்யும்போது நம் உடல் சம்பந்தமான சிக்கல்களை மிக எளிதாக சரி செய்து கொள்ள முடியும்.
பஞ்ச பூதங்கள் இந்த அண்டத்திலும் உள்ளது. நம் உடலினுள்ளும் எப்படி பிரதிபலிக்கிறது என்பதையும் நாம் முந்தைய பதிவில் கண்டோம்.
பஞ்சபூதங்கள் சமநிலையிலிருந்தால் பிரபஞ்சம் தொடர்ந்து தன பணியை செவ்வனே செய்து கொண்டிருக்குக்கும். அப்படி செய்து கொண்டிருப்பதாலேயே  இன்றளவும்  சீராக இயங்கிக்கொண்டிருகிறது.நம் உடலும் பஞ்சபூத சமன்பாட்டின்படியே சீராக இயங்கிகொண்டிருக்கிறது.நோய்களற்ற நிலையில் உள்ளது.

கட்டைவிரல்

நடுவிரல்

ஆள்காட்டிவிரல்

மோதிரவிரல்

 'மிகினும் குறையினும் நோய் செய்யும்'அய்யன் வள்ளுவர் வாக்குப்படி, இந்த பஞ்ச பூதங்களில் செயல்பாடு மிகுந்து போனாலோ ,அல்லது குறைவு பட்டு போனாலோ அதாவது இயல்பான நிலையிலிருந்து சற்று பிசகிவிட்டாலோ நம் உடல் நோய் வசமாகிவிடும், துன்பம் நம்மை ஆட்கொண்டுவிடும்.

சுண்டுவிரல்
நம்முடைய ஐந்து விரல்களும் ஒவ்வொரு பஞ்சபூத மூலகத்தை குறிக்கும்.கட்டைவிரல் நெருப்பையும் ,ஆள்காட்டி விரல் காற்றையும்,நடுவிரல் ஆகாயத்தையும்,மோதிரவிரல் நிலத்தையும்,சுண்டுவிரல் நீரையும் குறிக்கும்.பெரும்பாலான உடல் ஆரோக்கியக் குறைபாடுகள் ஐந்து வகை மூலங்களின் சமத்துவமின்மையால் ஏற்படுகிறது. பஞ்ச பூதங்கள் என்று அழைக்கப்படும் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியன சமநிலையில் இருப்பதற்குத் தியானம் உதவுகிறது. இந்த ஐந்து வகை மூலங்கள் வேறுவிதமாக நிலம், நீர், நெருப்பு, மரம், உலோகங்கள் என சீனப் பாரம்பரிய மருத்துவத்தில் கூறப்படுகிறது.
தினமும்
காலையில் இருபது நிமிடங்கள் உங்களுக்கு உரிய முத்திரையைத் தேர்வு செய்து
தியான நிலையில் அமருங்கள். நன்கு இழுத்து மூச்சை உள்ளேயும் வெளியேயும்
விடுங்கள். மந்திரங்களோ வேறு சொற்களோ இதில் இல்லை.இனி, முத்திரை வகைகளைப் பற்றிப் பார்ப்போம். பொதுவாக தியானத்தில் 20 – 45 நிமிடங்கள் உங்களுக்குத் தேவையானதென நீங்கள் கருதும் முத்திரையைத் தெரிவு செய்து கொண்டு ஆழ்ந்த சுவாசத்தில் ஈடுபடுதலே போதுமானதெனக் கருதப்படுகிறது, எனினும் சிலமுத்திரைகளுக்கு மந்திரங்களைப் பயன்படுத்துவர்.

Thursday, 1 September 2011

பிரபஞ்சம், அண்டம் , யுனிவர்ஸ்......


 அண்டம்,பிரபஞ்சம் ,யுனிவர்ஸ் என்றெல்லாம் சொல்கிறார்களே. ஒரு நிமிடம் உங்கள் கண்களை மூடி யோசனை செய்து பாருங்கள் , இது எப்படி நடக்கிறது. விஞ்ஞானம் ஆயிரம் விளக்கங்களைக் கூறினாலும் அனைவருக்கும் புரிந்துவிடாது.
ஒரு வெற்றிடமான அந்தரங்கத்தில் சூரியன் ,கோள்கள் ஏகப்பட்ட சமாச்சாரங்கள் இவை எப்படி ஒரு ஒழுங்கு முறையோடு அதனதன் வேலையை தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறது.இதற்கு யார் காரணம்?
இது எப்படி சாத்தியம்? நாம் என்றைக்கும் சிந்தித்துணர முடியா விஷயம். ஆனால் இறை ஞானிகள் பல ஆயிரம் ஆண்டுகட்கு முன்பே சொன்னது ,இந்த பிரபஞ்சம் முழுவதும் ஒரு ஒழுங்கான இயக்கத்தில் தன்பணியை தொடர்ந்து செய்வதன் காரணம்,நீர்,நிலம்,காற்று,ஆகாயம்,நெருப்பு, இந்த ஐந்து விஷயங்கள்தான்.இந்த ஐந்தையும் பஞ்சபூதம் என்கிறோம். இதில் எதாவது ஒன்றில் அதன் செயல்பாட்டில் குறைவுபட்டோ,மிகுந்தோ போனால் பிரபஞ்சம் ,அண்டம் ,யுனிவர்ஸ் என்கிற இந்த விஷயம் இல்லாமல் போயிருக்கும்
சரி அதைவிடுங்க...நாம மனிதனாக உருவம் கொண்டு .....பேசுகிறோம்,..கை, கால்களை அசைக்கிறோம் ...இன்னும் என்னவெல்லாமோ ஜகஜால வித்தையெல்லாம் செய்யறோம் . இதற்க்குக் காரணம் ஒரு ஆற்றல் நமக்குள்ளே இருக்கிறது அதை உயிராற்றல் என்று சொல்லிவிடலாம். இந்த உயிரை யாராவது பார்த்ததுண்டா ? இவ்வளவு விஞ்ஞானம் வளர்ந்தும் விடை தெரியா புதிர் தான் உயிர்.
'''''பரமாய சக்தியுள் பஞ்சமாபூதம் தரம் மாறில்
தோன்றும் பிறப்பு''''''
அவ்வையார் பாட்டைப் பொருளுணர்ந்து பார்க்கும்போது இந்த உயிர் என்கிற மேட்டர் இந்த உடல் என்கிற விஷயமாக மாறுவதற்கு முன்பு கண்களுக்கு புலப்படாத நுண் மூலகங்கலாகத் தான் இருந்தது என்கிறார். அப்படியென்றால் இந்த உயிர் என்பது பஞ்சபூதங்களின் கலவை(our body and soul is a mixture of five elements) என்று உணர முடியும்.
நீங்கள் நன்றாக யோசித்துப் பார்க்கும்போது இந்த பிரபஞ்சம் , இந்த உடல் இவைகளின் மூலம் ,அடிப்படை எல்லாமே இந்த நீர்,நிலம், காற்று, ஆகாயம்,நெருப்பு என்கிற பஞ்ச பூதங்கள்மட்டுமே.அதனால் தான்
''''''அண்டத்தில் உள்ளதே ,பிண்டத்தில் உள்ளது
பிண்டத்தில் உள்ளதே அண்டத்தில் உள்ளது
அண்டமும் ,பிண்டமும் ஒன்றே
அறிந்துதான் பார்க்கும்போது''''''''''''

                                                    

Tuesday, 30 August 2011

அக்குப்பங்சர் என்றால் என்ன?

இந்தக் கேள்விக்கு நான் புதிதாக எதுவும் சொல்ல வேண்டியதில்லை, நிறைய நபர்கள் ஏற்கனவே அறிந்து வைத்துள்ள விஷயம். மெல்லிய ஊசிகொண்டு உடலினுள் செருகி அதன் மூலம் நோயைக் குணப்படுத்துவது. இது ஒரு கலையாக இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் அதிலும் குறிப்பாக பழனி மலையில் வாழ்ந்த போகர் சித்தர் பயன்படுத்தியதாகவும் ,பின்னர் அவர் சீன நாட்டிற்கு சென்றபோது அந் நாட்டினர் அக்கலையைக் கற்று அதை ஒரு விஞ்ஞானமாக மாற்றி உலகத்திற்கு அர்ப்பணித்தனர்  என்பது வரலாறு. இந்த மருத்துவ முறையின் மூலம் நோயை முற்றிலுமாக,எளிதாக குணப்படுத்த முடியும். மொத்தத்தில் இதுஒருஎளிய,வலியில்லாத,அதிகபொருட்செலவில்லாத,பக்க விளைவுகள்
 இல்லாத  அற்புதமான ,ஆன்மீக , அறிவியல் கலை என்று சொன்னால் மிகையாகாது.
                        அக்குப்பங்க்சர் நோயின் அறிகுறிகளையோ ,விளைவுகளையோ பார்ப்பதில்லை மாறாக அந்த நோய் ஏற்பட மூல காரணம் (Root cause) என்ன என்பதை கண்டறிந்து அதற்கு ஏற்றாற்போல் சிகிட்சையளிப்பதால் நோயை முற்றிலுமாக வேரோடு  நீக்கி விடுவதால் அதை அற்புத ஆன்மீக அறிவியல் கலை என்கிறோம்.
                      

Sunday, 28 August 2011

அடங்கல் என்றால் என்ன?

நம்முடைய தமிழ் முன்னோர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னேரே உடலின் பல இடங்களில் நோய் தீர்க்கும் இடங்களை அதவது வர்ம ஸ்தலங்களை இறை ஞானத்தின் மூலம் கண்டறிந்துள்ளனர்.  
             அப்படியென்றால் எந்த இடத்தில் அடிபட்டு வர்மம் உண்டானதோ அது  தொடர்புடைய  வர்ம ஸ்தலத்தை சிறிய அளவில் பாதிப்பை உண்டாக்கும்போது அல்லது தூண்டிவிடும்போது, வர்மம் இளகும். அது தொடர்பான உடல் தொந்தரவு முழுமையாக நீங்கிவிடும்.
  மொத்தத்தில் வர்மத்தால் உண்டான நோய்களை  குணமாக்கக்கூடிய இடங்களை நாம்  அடங்கல்கள் என்கிறோம்.

வர்மம் என்றால் என்ன?

வர்மம் என்பது நோய்களை உருவாக்கும் இடம். அப்படிஎன்றால் வர்மம் எப்படி ஏற்படுகிறது.  ஒரு குறிப்பிட்ட வேகத்தில்,ஒரு குறிப்பிட்ட இடத்தில்,ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அடி ,இடி, குத்து ஏற்படும்போது ,  நம்
உடலில் சுற்றுப் பெற்றுக் கொண்டிருக்கிற சர சுவாசம் அல்லது ஜீவ ஆற்றல் நிலையாக ஓரிடத்தில் நின்று கொண்டிருப்பது. அப்படி நம் உடலில் சுற்றிகொண்டிருக்கிற அந்த ஜீவ ஆற்றல் நிலையாக ஓரிடத்தில் நின்று விட்டால் அதை நாம் வர்மம் என்கிறோம்.
                               அப்படி நம் உடலில் வர்மம் ஏற்பட்டால் அது தொடர்புடைய உறுப்பில் பாதிப்ப்போ ,செயலிழப்போ , மயக்கமோ ,ஜன்னியோ ஏற்படும் . அதை குறிப்பிட்ட நேரத்தில் சரி செய்யாமல் விட்டோமானால் மேற்சொன்ன பாதிப்புகளைத் தொடர்ந்து மரணம் வரை செல்லும் .
மொத்தத்தில் நோய்களை உருவாக்கும் இடங்களே வர்மம் என்கிறோம்.                                                                 

Wednesday, 3 August 2011


'அக்கு' என்றால் ஊசி ,' பங்க்சர் ' என்றால் துளையிடுதல்  என்று பொருள் .

.ஆரோக்கியமும் ,தமிழ் நாகரிகமும்

உலக நாகரீகங்களிலேயே தமிழர் நாகரீகமே மனித குலத்தின் ஆரோக்கிய வாழ்வை 
மையமாக கொண்டு , ஆரோக்கியத்தை முன்னிலைப் படுத்தியே ஒவ்வொரு விஷயமும் ,வாழ்வியலும் ,
கலாச்சாரமும் ,உணவும், உடையும்  அமைந்திருந்தன .  என்றைக்கு தமிழன் தன்
முன்னோரின் வாழ்க்கை முறையை  கடைபிடிக்கத் தவறினானோ அப்போதே அவனுக்கு 
நோய்  நிறைந்த , ஆயுள் குறைந்த வாழ்வு  ஆட்டிபடைக்கத்  துவங்கி விட்டது .
                                உடலின் மொழியை உணர முடியாத மரக்கட்டையாகி ,நடைபிணமாக  வாழ்கின்ற நிலை 
ஏற்பட்டது. இன்றைய அவசர யுகத்தில்  பணம் ஒன்றே குறிக்கோளாகக்  கொண்டு  ஆரோக்கியத்தை மிக லேசாகத் தொலைத்துவிட்டு ,அல்லல் படும் கேவலமான சூழ்நிலையை அறிய மறுக்கிறான்.
                                            நம் முன்னோர்கள் கற்றுத்தந்த, அரிய கலைகளான வர்ம மருத்துவம்  , அக்குப்பஞ்சர் , பல அற்புதமான விளைவுகளைக் கொடுக்கக் கூடிய ஒன்று . அதை முழுமையாக எனக்குத் தெரிந்த முறையில் என் தமிழ் மக்களோடு தொடர்ந்து பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். தொடர்ந்து என் பதிவுகளப் பார்த்து , பயன் பெற்று , தமிழோடு  என்றும் இணைந்திருங்கள் .

வர்மக்கலையும், அக்குப்பங்க்சரும்

நான் வலைப்பூவுக்கு புதியவன் . தமிழ்  மொழியின் மீது  என்றைக்கும் எனக்கு  தீராத காதல் . இதன் காரணமாக  இந்த மருத்துவ சம்பந்தப்பட்ட   வலைப்பூ உருவாகக்  காரணம் . எதாவது தவறு நேரும் பட்சத்தில் சுட்டிக் காட்டினால்  திருத்திக்கொள்கிறேன் . நான் ஒரு முழு நேர அக்குபங்க்சர்  தெரபிஸ்ட். கூடவே  வர்மக்கலையும்  ஆராய்ச்சி . என் வலைப்பூ  காண நேரிட்டால் தெரிந்த தகவல்களை என்னோடு பகிர்ந்துகொள்ளுமாறு  தாழ்மையுடன் வேண்டுகிறேன் .
                                                 ஜ. மு க ம து     ச ரீ ப் BBM., M.Acu