வர்மம்
 வர்மம் என்றால் என்ன?
வர்மம் என்பது நோய்களை உருவாக்கும் இடம். அப்படிஎன்றால் வர்மம் எப்படி ஏற்படுகிறது.  ஒரு குறிப்பிட்ட வேகத்தில்,ஒரு குறிப்பிட்ட இடத்தில்,ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அடி ,இடி, குத்து ஏற்படும்போது ,  நம்
உடலில் சுற்றுப் பெற்றுக் கொண்டிருக்கிற சர சுவாசம் அல்லது ஜீவ ஆற்றல் நிலையாக ஓரிடத்தில் நின்று கொண்டிருப்பது. அப்படி நம் உடலில் சுற்றிகொண்டிருக்கிற அந்த ஜீவ ஆற்றல் நிலையாக ஓரிடத்தில் நின்று விட்டால் அதை நாம் வர்மம் என்கிறோம்.
                               அப்படி நம் உடலில் வர்மம் ஏற்பட்டால் அது தொடர்புடைய உறுப்பில் பாதிப்ப்போ ,செயலிழப்போ , மயக்கமோ ,ஜன்னியோ ஏற்படும் . அதை குறிப்பிட்ட நேரத்தில் சரி செய்யாமல் விட்டோமானால் மேற்சொன்ன பாதிப்புகளைத் தொடர்ந்து மரணம் வரை செல்லும் .
மொத்தத்தில் நோய்களை உருவாக்கும் இடங்களே வர்மம் என்கிறோம்.         


அடங்கல் என்றால் என்ன?
நம்முடைய தமிழ் முன்னோர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னேரே உடலின் பல இடங்களில் நோய் தீர்க்கும் இடங்களை அதவது வர்ம ஸ்தலங்களை இறை ஞானத்தின் மூலம் கண்டறிந்துள்ளனர்.  
             அப்படியென்றால் எந்த இடத்தில் அடிபட்டு வர்மம் உண்டானதோ அது  தொடர்புடைய  வர்ம ஸ்தலத்தை சிறிய அளவில் பாதிப்பை உண்டாக்கும்போது அல்லது தூண்டிவிடும்போது, வர்மம் இளகும். அது தொடர்பான உடல் தொந்தரவு முழுமையாக நீங்கிவிடும்.
  மொத்தத்தில் வர்மத்தால் உண்டான நோய்களை  குணமாக்கக்கூடிய இடங்களை நாம்  அடங்கல்கள் என்கிறோம்.' போதி தர்மர்'   தமிழ் குடியின் இன்னொரு வைரக் கிரீடம்


சூர்யாவின்முப்பரிமாண நடிப்பில் விரைவில் வெளி வரும் 'ஏழாம் அறிவு’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் போதி தர்மர் என்ற யோகியின் கதாபாத்திரம். அந்த போதி தர்மர் கதாபாத்திரம் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு காஞ்சிபுரத்தில் பிறந்த ஒரு தமிழனுடைய வரலாற்றைச் சொல்கிறது. அவரின் சரித்திரத்தைக் கொஞ்சம் பார்ப்போமா..

போதி தருமன் - 1887ஆம் ஆண்டு யோஷிடோஷி என்ற கலைஞரால் வரையப்பட்ட ஒரு படம்


காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த பல்லவ மன்னனான கந்தவர்மன் IV-க்கு மூன்றாவதாகப் பிறந்த குழந்தைதான் போதிதர்மர். இவரின் இயற்பெயர் புத்த வர்மன்(பௌத்தவர்மப் பல்லவன்).  கந்தவர்மன் IV-னின் மூன்று மகன்களென அறியப்படுவோர்:

1. நந்திவர்மன் I
2. குமாரவிஷ்ணு II
3. புத்தவர்மன் (போதிதர்மா) (பௌத்தவர்மப் பல்லவன்)

அக்காலத்தில் பல்லவ வம்சத்தில் பிறந்த கடைசிக் குழந்தையை புத்த மதத்திற்கு அர்ப்பணிப்பது மரபு. எனவே  பல்லவ மன்னன் கந்தவர்மன் IV, மகனின் குருகுல வாழ்க்கைக்காக பிரஜ் என்கிற சமய குருவிடம் சேர்த்திருக்கிறார் . இவர் காஞ்சியில் தங்கி பௌத்த சிந்தனைகளைப் பரப்பி வந்தவர். சிறுவன் போதியின்  அபார ஞானத்தைப் பார்த்து பிரமித்த பிரஜ், தனக்கு அடுத்த வாரிசாக 28வது குருவாக போதியை  நியமிக்கிறார். காலப்போக்கில் போதி தர்மர் காஞ்சிபுரத்திலிருந்தபடியே பல கலைகளைக் கற்றுத் தேர்கிறார்.  இதில் களறி, வர்மம் போன்ற அதிரடிக் கலைகளும் உண்டு. காஞ்சியிலிருந்து நாலந்தா சென்று அங்கிருந்து கி.பி.526-ல் தெற்கு சீனாவிற்குச் செல்கிறார் போதி தர்மர்.போதிதர்மாவின் காலம்  கி.பி.475-550 என்று பதிவுகள் கூறுகின்றன.
சென்னையை அடுத்த காஞ்சிபுரத்தில் பிறந்தவர்தான் இந்த போதிதர்மர். மூன்று ஆண்டுகளாக காஞ்சிபுரத்தில் இருந்து சீனாவிற்கு நடைபயணமாக சென்ற போதி தர்மர், மார்சியல் ஆர்ட் என்ற தற்காப்பு கலையை சீனர்களுக்கு சொல்லிக்கொடுத்தவராம். இப்போது சீனாவில் எங்கு திரும்பினாலும் போதி தர்மரின் சிலை உள்ளதாம். ஐந்து வயது சிறுவர்களிடம் கேட்டாலும் அவரைப்பற்றி சொல்கிறார்களாம். அந்த அளவுக்கு சீனாவில் தெய்வமாக மதிக்கப்படும் ஒரு தமிழர் போதி தர்மர். ஆனால் அவருக்கு காஞ்சிபுரத்தில் ஒரு சிறிய சிலை மட்டுமே உள்ளதாம். மற்றபடி அவரைப்பற்றிய எந்த தகவலும் இங்கிருப்பவர்களுக்கு தெரியாது. அந்த அளவுக்கு ஒரு தமிழனின் வரலாறு மறைக்கப்பட்டிருக்கிறது என்பது கவலைக்குரிய விசயம்

அன்றைய சீனப் பேரரசராக இருந்தவர் "லியாங் வு டீ".புத்த மதத்தில் கொண்ட ஈடுபாட்டால் பௌத்த  ஆலயங்களையும் விகாரங்களையும் நிறுவிய சீனப் பேரரசர். தமிழகத்திலிருந்து வந்த புத்தத் துறவியான  போதி தர்மரை கேள்விப்பட்டு மிகுந்த மரியாதையோடும், அன்போடும் உபசரித்து சீனாவில் தங்கிவிட  வேண்டுகிறார். அங்கு ஷாஓலின் என்ற இடத்தில் தங்கி பௌத்த மதத்தைப் பரப்பிய போதி தர்மர், தமிழகத்தில் தான் கற்ற கலைகளையும் சீனர்களுக்குப் பயிற்றுவித்தார். அப்படி போதிதர்மர் கற்றுக் கொடுத்த கலைகளில் ஒன்றுதான் குங்ஃபூ.
போதி தர்மரைப் பற்றி வேறு சில வரலாறுகளும் இருக்கின்றன.
அவர் சீனாவில் தொடர்ச்சியாக ஒன்பதாண்டுகள் தியானத்தில் இருந்தாராம். ஒரு சுவற்றை நோக்கி அமர்ந்துகொண்டு அதனையே பார்த்தவண்ணம் இருந்தாராம். ஆரம்பத்தில் தூக்கம் வந்ததாம். ஆகவே தம்முடைய கண்களின் மேல் இமைகளை எடுத்து தூக்கி எறிந்துவிட்டாராம். அந்தவண்ணம் அவர் கண்களை மூடாமல் தூங்காமல் இருந்தாராம்.
அந்த இமைகள் விழுந்த இடத்தில் ஒரு செடி முளைத்ததாம். அந்தச் செடியின் இலைகள் காய்ந்து உலர்ந்து சருகுகளாக அங்கே கிடந்தனவாம்.
ஒரு புத்த பிட்சு ஒருமுறை திறந்த வெளியில் அந்தச்செடி இருந்த இடத்திற்கு அருகில் அமர்ந்து ஏதோ படித்துக் கொண்டிருந்தாராம். அவர் எப்போதுமே வெந்நீர்தான் குடிப்பவர். அந்த வெந்நீர்ப் பாத்திரத்துக்குள் அந்தச் செடியின் சருகுகள் காற்றால் அடித்துக்கொண்டுவரப்பட்டு விழுந்துவிட்டனவாம். நீரை வீணாக்க விரும்பாத புத்தபிட்சு, அந்தச் சருகுகளை எடுத்தெறிந்துவிட்டு, அந்த வெந்நீரைப் பருகினாராம்.
அதனைப் பருகியதும் உடல் சுறுசுறுப்பாகவும் மனது தெளிவாகவும் இருந்ததாம். அதுவரைக்கும் அழுத்திக்கொண்டிருந்த சோம்பல் தூக்கம் ஆகியவை சென்ற இடம் தெரியாமல் ஓடி மறைந்துவிட்டனவாம்.
அந்தச்செடியை ஆராய்ந்து பர்த்துவிட்டு, அதன் இலைகளைப் பானமாக்கி குடிக்கும் வழக்கத்தைத் தாமும் மேற்கொண்டு விட்டு சீனாவிலும் அந்த பிச்சு பரப்பிவிட்டாராம். அப்படித் தோன்றியதுதான் தேயிலையாம்.
போதிதர்மர் சீனாவில் இருந்த காலத்தில் புத்தபிட்சுகள் பிச்சை எடுத்துக்கொண்டு பலவீனமானவர்களாகவும் சமுதாயத்திற்கே பாரமாகவும் இருந்தார்கள். மற்றவர்களால் துன்புறுத்தப்பட்டுக் கொண்டு பயந்தே வாழ்ந்திருந்தார்கள்.
ஆனால் போதிதர்மர் தம்முடைய சீடர்களுக்கு மூச்சுப்பயிற்சியின் சில நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுத்தார்.
அந்தப் பயிற்சிகளின் மூலம் மனதின் இயக்கத்தையும் உடலின் செயல்பாட்டையும் அடக்கமுடியும். இன்னொரு பயிற்சியின்மூலம் உடலை வலுவாக்கி அசுரபலத்தைப் பெறமுடியும். மனதை தீட்சண்யமாகச் செயல்படுத்த முடியும்.
உடற்பயிற்சிகளையும் சொல்லிக் கொடுத்தார்.
அவர்களுக்கு விவசாயம், சிறுதொழில்கள் போன்றவற்றைச் செய்யச் சொல்லிக்கொடுத்தார். தங்களது கோயில்களைச்
சுற்றிலும் தங்களுக்குத் தேவையான உணவை அவர்களே விளைவித்துக்கொண்டார்கள். சமுதாயத்திடம் பிச்சையெடுப்பதில்லை.
உடல் உறுதி அசுரபலம் ஆகியவற்றைக்கொண்டு சில தற்காப்பு முறைகளயும், தாக்குதல் முறைகளையும், ஆயுதங்களிலிருந்து பாதுக்காத்துக்கொள்ளும் முறைகளையும், உடலில்காயம் ஏற்படாமுறைகளையும் கற்றுக்கொடுத்தார்.
பிற்காலத்தில் புத்தபிக்குக்கள், சமுதாயத்தின் உழைப்பின் பலன்களையெல்லாம் பிடுங்கித் தின்றுவிடுகிறார்கள் என்ற ஆத்திரத்தோடு சீனச்சக்கரவர்த்திகள் சிலர், பிக்குக்களை அடித்துக் கொல்வித்தபோது போதிதர்மரின் சீடபரம்பரையும் கோயில்களும் மட்டும் தப்பின.அவ்வாறு போதிதர்மர் தோற்றுவித்த பௌத்தக்கோயில்களை ஷாஓலின்(Shaolin) கோயில்கள் என்பார்கள்
.
இந்தப் படத்தைப் பார்க்கும்போது தன கண் இமைகளைத்  தியானத்தில் ஒன்பதாண்டுகள் இருக்கும்போது ,தூக்கம் வராமலிருக்க  தூக்கி எரிந்து விட்டதை அறிய முடிகிறது .


 வர்மக்கலையை யார் பழக முடியும்?


வர்மக்கலையை யார் பழக முடியும் என்றால் , முதலில் குரு மூலம் தான் இந்த வர்மக்கலையை கற்றுக்கொள்ள வேண்டும். தற்போது சந்தையில் கிடைக்கும் புத்தகங்களை வாங்கி அதைப் படித்து நான் வர்மம் செய்கிறேன் பேர்வழி என்று சொல்லி நிறையப் பேர் மார்க்கட்டில் வந்து விட்டனர். மரபு வழி சார்ந்த இந்தக் கலையை மிகுந்த அனுபவமும்,விடாமுயற்சியும் இருந்தால் மட்டுமே இதில்
expert  ஆகா முடியும். ஏதோ ஒன்றிண்டு வகுப்புகள் ,அரைகுறையான பயிற்சி கண்டிப்பாக பயன் தராது.
                                       நான் கற்றுக்கொண்ட  வகையில் என் குருமார்கள் தன் மகன்களுக்குகூட  இந்த கலையைக் கற்றுக் கொடுக்க முனையவில்லை. காரணம் கோபம், கர்வம், பழிவாங்கும் எண்ணம்  கொண்டவர்கள் கையில் இந்தக் கலை  சிக்குண்டால் இதன் போக்கு வேறு விதமாகச் சென்று விடும்.
          நீங்கள் இந்த மாதிரி நபர் இல்லையென்று வைத்துக் கொண்டாலும், மிகுந்த  நுண்ணறிவும், பொறுமையும், நிதானமும்,அனைத்திற்கும் மேலாக சேவை செய்யக் கூடிய எண்ணமும் இவைகளோடு எல்லாம் வல்ல இறைவன் நாட்டம் இருந்தால் உங்களுக்கு இந்தக் கலை கைகூடி வரும்.