Tuesday, 30 August 2011

அக்குப்பங்சர் என்றால் என்ன?

இந்தக் கேள்விக்கு நான் புதிதாக எதுவும் சொல்ல வேண்டியதில்லை, நிறைய நபர்கள் ஏற்கனவே அறிந்து வைத்துள்ள விஷயம். மெல்லிய ஊசிகொண்டு உடலினுள் செருகி அதன் மூலம் நோயைக் குணப்படுத்துவது. இது ஒரு கலையாக இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் அதிலும் குறிப்பாக பழனி மலையில் வாழ்ந்த போகர் சித்தர் பயன்படுத்தியதாகவும் ,பின்னர் அவர் சீன நாட்டிற்கு சென்றபோது அந் நாட்டினர் அக்கலையைக் கற்று அதை ஒரு விஞ்ஞானமாக மாற்றி உலகத்திற்கு அர்ப்பணித்தனர்  என்பது வரலாறு. இந்த மருத்துவ முறையின் மூலம் நோயை முற்றிலுமாக,எளிதாக குணப்படுத்த முடியும். மொத்தத்தில் இதுஒருஎளிய,வலியில்லாத,அதிகபொருட்செலவில்லாத,பக்க விளைவுகள்
 இல்லாத  அற்புதமான ,ஆன்மீக , அறிவியல் கலை என்று சொன்னால் மிகையாகாது.
                        அக்குப்பங்க்சர் நோயின் அறிகுறிகளையோ ,விளைவுகளையோ பார்ப்பதில்லை மாறாக அந்த நோய் ஏற்பட மூல காரணம் (Root cause) என்ன என்பதை கண்டறிந்து அதற்கு ஏற்றாற்போல் சிகிட்சையளிப்பதால் நோயை முற்றிலுமாக வேரோடு  நீக்கி விடுவதால் அதை அற்புத ஆன்மீக அறிவியல் கலை என்கிறோம்.
                      

Sunday, 28 August 2011

அடங்கல் என்றால் என்ன?

நம்முடைய தமிழ் முன்னோர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னேரே உடலின் பல இடங்களில் நோய் தீர்க்கும் இடங்களை அதவது வர்ம ஸ்தலங்களை இறை ஞானத்தின் மூலம் கண்டறிந்துள்ளனர்.  
             அப்படியென்றால் எந்த இடத்தில் அடிபட்டு வர்மம் உண்டானதோ அது  தொடர்புடைய  வர்ம ஸ்தலத்தை சிறிய அளவில் பாதிப்பை உண்டாக்கும்போது அல்லது தூண்டிவிடும்போது, வர்மம் இளகும். அது தொடர்பான உடல் தொந்தரவு முழுமையாக நீங்கிவிடும்.
  மொத்தத்தில் வர்மத்தால் உண்டான நோய்களை  குணமாக்கக்கூடிய இடங்களை நாம்  அடங்கல்கள் என்கிறோம்.

வர்மம் என்றால் என்ன?

வர்மம் என்பது நோய்களை உருவாக்கும் இடம். அப்படிஎன்றால் வர்மம் எப்படி ஏற்படுகிறது.  ஒரு குறிப்பிட்ட வேகத்தில்,ஒரு குறிப்பிட்ட இடத்தில்,ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அடி ,இடி, குத்து ஏற்படும்போது ,  நம்
உடலில் சுற்றுப் பெற்றுக் கொண்டிருக்கிற சர சுவாசம் அல்லது ஜீவ ஆற்றல் நிலையாக ஓரிடத்தில் நின்று கொண்டிருப்பது. அப்படி நம் உடலில் சுற்றிகொண்டிருக்கிற அந்த ஜீவ ஆற்றல் நிலையாக ஓரிடத்தில் நின்று விட்டால் அதை நாம் வர்மம் என்கிறோம்.
                               அப்படி நம் உடலில் வர்மம் ஏற்பட்டால் அது தொடர்புடைய உறுப்பில் பாதிப்ப்போ ,செயலிழப்போ , மயக்கமோ ,ஜன்னியோ ஏற்படும் . அதை குறிப்பிட்ட நேரத்தில் சரி செய்யாமல் விட்டோமானால் மேற்சொன்ன பாதிப்புகளைத் தொடர்ந்து மரணம் வரை செல்லும் .
மொத்தத்தில் நோய்களை உருவாக்கும் இடங்களே வர்மம் என்கிறோம்.                                                                 

Wednesday, 3 August 2011


'அக்கு' என்றால் ஊசி ,' பங்க்சர் ' என்றால் துளையிடுதல்  என்று பொருள் .

.ஆரோக்கியமும் ,தமிழ் நாகரிகமும்

உலக நாகரீகங்களிலேயே தமிழர் நாகரீகமே மனித குலத்தின் ஆரோக்கிய வாழ்வை 
மையமாக கொண்டு , ஆரோக்கியத்தை முன்னிலைப் படுத்தியே ஒவ்வொரு விஷயமும் ,வாழ்வியலும் ,
கலாச்சாரமும் ,உணவும், உடையும்  அமைந்திருந்தன .  என்றைக்கு தமிழன் தன்
முன்னோரின் வாழ்க்கை முறையை  கடைபிடிக்கத் தவறினானோ அப்போதே அவனுக்கு 
நோய்  நிறைந்த , ஆயுள் குறைந்த வாழ்வு  ஆட்டிபடைக்கத்  துவங்கி விட்டது .
                                உடலின் மொழியை உணர முடியாத மரக்கட்டையாகி ,நடைபிணமாக  வாழ்கின்ற நிலை 
ஏற்பட்டது. இன்றைய அவசர யுகத்தில்  பணம் ஒன்றே குறிக்கோளாகக்  கொண்டு  ஆரோக்கியத்தை மிக லேசாகத் தொலைத்துவிட்டு ,அல்லல் படும் கேவலமான சூழ்நிலையை அறிய மறுக்கிறான்.
                                            நம் முன்னோர்கள் கற்றுத்தந்த, அரிய கலைகளான வர்ம மருத்துவம்  , அக்குப்பஞ்சர் , பல அற்புதமான விளைவுகளைக் கொடுக்கக் கூடிய ஒன்று . அதை முழுமையாக எனக்குத் தெரிந்த முறையில் என் தமிழ் மக்களோடு தொடர்ந்து பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். தொடர்ந்து என் பதிவுகளப் பார்த்து , பயன் பெற்று , தமிழோடு  என்றும் இணைந்திருங்கள் .

வர்மக்கலையும், அக்குப்பங்க்சரும்

நான் வலைப்பூவுக்கு புதியவன் . தமிழ்  மொழியின் மீது  என்றைக்கும் எனக்கு  தீராத காதல் . இதன் காரணமாக  இந்த மருத்துவ சம்பந்தப்பட்ட   வலைப்பூ உருவாகக்  காரணம் . எதாவது தவறு நேரும் பட்சத்தில் சுட்டிக் காட்டினால்  திருத்திக்கொள்கிறேன் . நான் ஒரு முழு நேர அக்குபங்க்சர்  தெரபிஸ்ட். கூடவே  வர்மக்கலையும்  ஆராய்ச்சி . என் வலைப்பூ  காண நேரிட்டால் தெரிந்த தகவல்களை என்னோடு பகிர்ந்துகொள்ளுமாறு  தாழ்மையுடன் வேண்டுகிறேன் .
                                                 ஜ. மு க ம து     ச ரீ ப் BBM., M.Acu