Monday, 26 December 2011

ஆசனம்...நாம் இளமையோடும்,ஆரோக்கியத்தோடும் வாழ!!!

யோகக் கலை.... சின்ன வயசிலிருந்தே நாம் கேட்ட இந்த வார்த்தையை கண்டுக்காம, இப்போ ஏதாவது உடல் பிரச்சினை வந்த பிறகு ஆசனப் பயிற்சிக்காக எங்கெங்கோ அலைய வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. சரி காலம் கடந்த ஞானம் என்றாலும் தெரிஞ்சுக்கோங்க!
                 இன்று உலக மக்கள் குறிப்பாக அந்நிய நாட்டு மக்கள் இந்தக் கலையை மிகவும் விரும்பிச் செய்கின்றனர்.ஒரு காலத்தில் முனிவர்களுக்கு மட்டும் சொந்தமாக இருந்த கலை இரன்று பட்டி தொட்டியெல்லாம் பரவலாக பலராலும் பின்பற்றி வருவது நல்ல விஷயம்.இந்தக் கலையை நாடி வருபவருக்குக் கண்டிப்பாக ஏதோ ஒரு விஷயம் அவருக்கு நிம்மதியையும், நிவாரணத்தையும் கொடுக்கிறது.யோகாசனம் யாருக்கு யோகம் இருக்கோ அவர்தான் ஆசனம் செய்ய முற்படுவர். ஆசனம் செய்ய எந்த நிபந்தனையுமில்லை ஒல்லியான,குண்டான,வயதான,இளமையான,நம்பிக்கையுடைய , நம்பிக்கையற்ற யாருக்கும் இது கண்டிப்பாக நற்பலனைத் தரும் என்பது என் நம்பிக்கை. உண்மை.
இந்த பதிவில் எனக்குத் தெரிந்த ஆசனங்களை முறையாக எழுத ஆரம்பிக்கிறேன். குறைகளிருப்பின் அறிவுறுத்த வேண்டுகிறேன்.பிழைகளை திருத்திக் கொள்கிறேன்.
 ஆசனம் என்றால் என்ன? ஆசனம் என்ற சொல் ,சமஸ்கிருதத்திலுள்ள  'உபவேசனே' என்ற மூலச் சொல்லிலிருந்து பிறந்தது. இதற்க்கு அர்த்தம், உட்காருதல், இருத்தல் என்று பொருள்.உலகத்தின் முதல் யோகாசிரியர் பதஞ்சலி முனிவர் இதற்க்கு, இரண்டு முக்கியத் தன்மைகளைச் சேர்க்கின்றார்."ஸ்திரம்" மற்றும் "சுகம்". ஸ்திரம் என்பது விழிப்புணர்ச்சியுடன் கூடிய ஸ்திரத்தன்மையைக் குறிக்கும்.சுகம் என்பது சௌகரியத்தைக் குறிக்கும்.ஆகவே ஆசனம் என்பது நிலையான ,சுகமானதாக இருக்க வேண்டும்.                  யோகாசனத்தை தொடர்ந்து செய்வதன் மூலம் உடல் நலமடைகிறது.
 ஆரோக்கியம் பெறுகிறது.மனம் நிம்மதி அடைகிறது. ஆத்மா சக்தி பெறுகிறது. உடற்பயிற்சியினால் உடல் மாற்றம் அடைவது போல் (கை,கால் மசில்ஸ்) வெளியில் தெரியாது.ஆனால் உடலின்  உள் உறுப்புகள் உறுதியாகி , நரம்புகள், வலுவேறி ,தசை நார்களைத் திடப்படுத்தி ,இரத்தத்தை உற்பத்தி செய்து, உடலில் தேங்கியுள்ள கழிவுப் பொருள்களை வெளியேற்றி உடல் நலமாக வைக்கும் பேராற்றல் யோகாசனதிற்குண்டு.தவிர நம் உடலில் தோன்றுகின்ற வியாதிகளையும் அகற்றி,மனம் சஞ்சலமில்லாத நல்வாழ்வையும் அளிக்கிறது.
            மனிதன் நோயின்றி வாழ வேண்டுமானால் சிறப்பு உறுப்புகளான சுரப்பிகள் (கிளாண்ட்ஸ்) நன்கு செயல்பட வேண்டும்.இல்லையென்றால் பல நோய்கள் நம்மைத் தாக்கி உடல் நிலையை பாதிக்கும்.
உதாரணமாக பான்கிரியாஸ் சுரப்பி வேலை செய்யாததன் விளைவு நீரிழிவு நோய். ஆகவே ஆசனம் செய்வோம்.....ஆரோக்கியம் பெறுவோம்.
   

No comments:

Post a Comment