Thursday, 22 December 2011

வர்மக்கலையை யார் பழக முடியும்?

வர்மக்கலையை யார் பழக முடியும் என்றால் , முதலில் குரு மூலம் தான் இந்த வர்மக்கலையை கற்றுக்கொள்ள வேண்டும். தற்போது சந்தையில் கிடைக்கும் புத்தகங்களை வாங்கி அதைப் படித்து நான் வர்மம் செய்கிறேன் பேர்வழி என்று சொல்லி நிறையப் பேர் மார்க்கட்டில் வந்து விட்டனர். மரபு வழி சார்ந்த இந்தக் கலையை மிகுந்த அனுபவமும்,விடாமுயற்சியும் இருந்தால் மட்டுமே இதில்
expert  ஆகா முடியும். ஏதோ ஒன்றிண்டு வகுப்புகள் ,அரைகுறையான பயிற்சி கண்டிப்பாக பயன் தராது.
                                       நான் கற்றுக்கொண்ட  வகையில் என் குருமார்கள் தன் மகன்களுக்குகூட  இந்த கலையைக் கற்றுக் கொடுக்க முனையவில்லை. காரணம் கோபம், கர்வம், பழிவாங்கும் எண்ணம்  கொண்டவர்கள் கையில் இந்தக் கலை  சிக்குண்டால் இதன் போக்கு வேறு விதமாகச் சென்று விடும்.
          நீங்கள் இந்த மாதிரி நபர் இல்லையென்று வைத்துக் கொண்டாலும், மிகுந்த  நுண்ணறிவும், பொறுமையும், நிதானமும்,அனைத்திற்கும் மேலாக சேவை செய்யக் கூடிய எண்ணமும் இவைகளோடு எல்லாம் வல்ல இறைவன் நாட்டம் இருந்தால் உங்களுக்கு இந்தக் கலை கைகூடி வரும்.

2 comments:

  1. Dear sir,

    Is this starting article for varma
    we are except lot of you,
    yours,
    senthilmurugan.M

    ReplyDelete
  2. மலேசியாவில் கூட வர்மம் அறிந்தவர் உள்ளனர். ஆனால் தான் மண்ணுக்குப் போகும் போது அதையும் கொண்டுபோகத்தான் நினைகிறார்கள். நாம் தீயவர் அல்ல என்பதை எப்படிதான் உணர்த்துவது.. இன்னும் பத்து போதிதர்மன் வந்தாலும் நம் இனம் மாறாது. போதிதர்மன் செய்த மிகப் பெரிய நல்ல செயல் அவர் சீனர்களுக்குக் கற்றுத் தந்ததுதான்..

    ReplyDelete