Tuesday, 20 September 2011

காற்று மூலகம் METTAL ELEMENT

மெட்டல் என்கிற  காற்று மூலகம்
                                                            காற்று  இல்லாமல் நம்மால் கண்டிப்பாக உயிர் வாழ முடியாது.இன்று அநேகப் பேர்  ஏன் அனைவருமே மூச்சு என்கிற விஷயத்தை நினைப்பதேயில்லை. பொத்தாம் பொதுவாக மூச்சு முக்கியம் என்று சொன்னாலும், அதை எப்படிப் பயன்படுத்துவது என்பதை அறிய முனைவதில்லை. ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்வதில்லை.இறை ஞானிகள் அதைக் கற்றுத்தேர்ந்தவர்கள். மூச்சுக்காற்றை அடக்கி ஆளத் தெரிந்தவர்கள். நாம் அந்த அளவு தெரிய வேண்டியதில்லை,கொஞ்சம் முறையான சுவாசம் செய்யத் தெரிந்தாலே ஆரோக்கியம் நமக்குச் சொந்தம்.நீண்ட மூச்சு உள்வாங்கி, நீண்ட மூச்சாக வெளிவிடவேண்டும். பொதுவாகவே நம் அவசரகதி வாழ்க்கையில் வேகமான சுவாசமே அன்றாடம் நடக்கிறது. நாம் உள்ளிழுக்கும் காற்றானது நம் நுரையீரலை முழுமையாக அதன் அடிப்பகுதி நுண்ணறைகள் வரை செல்கிறதா என்றால் , கண்டிப்பாக இல்லை. இந்த மண்ணெண்ணெய்  பம்ப் ஸ்டவ்வில் எப்படி காற்றடிப்போமோ அந்த மாதிரி பொசுக்,பொசுக் என்று தான் மூச்சு விடுகிறோம் . நாம் இழுக்கும் காற்று நுரையீரல் வாயில் (entrance) வரை சென்று ,வெளியேறிவிடுகிறது. காரணம் படபடப்பு ,பதட்டம், ஓட்டம் .பணம் பண்ணவேண்டும் ,பணம் பண்ணவேண்டும் என்ற ஓட்டம்.நம்முடைய உடலின் கடைக்கோடி ஒவ்வொரு அணுவுக்கும் உண்டான ஆக்சிஜன் கிடைத்ததா என்று உணர மறந்துவிட்டோம்.முடிவில் நோய் ,வாழும் வயதில் மரணம் .இதற்க்கு யார் காரணம் . நாம், நம் மனம்.
"நான் உன்னைப் படைத்ததே என்னை வணங்குவதற்கன்றி வேறெதற்காகவும் இல்லை"
                              இறைவன் சதாசர்வ காலமும் தன்னை  நினைப்பதற்கும் வணங்குவதற்கும் தான் மனிதனாகிய உன்னைப் படைத்தேன்.அதாவது இறையைத்தேடு என்கிறான் .நமக்கு இந்த வல்லினம் ,மெல்லினம்,இடையினத் தகராறு எப்போதும் இருப்பதால் நாம் இறைவனைத் தேடாமல் இரையைத் தேடி ஓடுகின்றோம். இந்த அவசரமான ஓட்டம் நிறைந்த இந்த வாழ்க்கை முறையில் முறையான சுவாசம் என்பது நினைத்துப்பார்க்க முடியாத ஒன்று. உணர்ந்தவர்கள் முறையாகச் செய்து ஆரோக்கிய வாழ்க்கையைப் பெறுகின்றனர். நம் உடலில் உயிர் என்பது பஞ்சபூதக் கலவை என்று முன்னர் கண்டோம். இந்த பஞ்சபூதங்கள் எங்கே இருக்கிறதோ அங்கே உயிர் நலமாக இருக்கும். பஞ்ச பூதம் ஒன்றில் குறைவு ஏற்ப்பட்டாலும் நம் உயிருக்கு நலம் கெடும் என்பது உறுதி.
                                                         அப்போ , இந்த காற்று என்கிற மூலகத்தை நாம் எப்படிக் கையாள்கிறோம் என்பதை கண்டிப்பாக நினைத்துப்பார்க்க வேண்டும். மீண்டும் முத்திரையோடு சந்திக்கிறேன்......
                                                                              

Tuesday, 6 September 2011

முத்திரைகளை எப்படிச் செய்ய வேண்டும்?

முத்திரைகளை எப்படிச் செய்ய வேண்டும், என்பதை இப்போது காணலாம்.நமது ஒவ்வொரு விரலும் ஒரு மூலகத்தை சார்ந்திருக்கிறது, தேவைக்கேற்ப விரல்களை தொடுவதன் மூலம் நம் உடலின் பஞ்ச பூத சமன்பாட்டை நேர்படுத்தி நோயிலிருந்து முழுமையாக் விடுபடலாம்.
                                  கழிவுகளின் தேக்கம் நோய்.அப்படியானால் கழிவுகளின் நீக்கமே மருந்து. எனவே கழிவுகளை முழுமையாக நீக்கிவிட்டால் நம் உடல் ஆரோக்கியமாக மாறிவிடும் என்பதில் ஐயமில்லை.அதனால் ஆரோக்கியமாக வாழ நினைப்பவர் முதலில் இந்த முத்திரையைத் தொடர்ந்து ஒரு பதினைந்து நாட்கள் செய்ய வேண்டும். அதாவது ஒரு அம்மாவாசை நாளில் ஆரம்பிக்க வேண்டும். வளர்பிறை நாட்களில் செய்தால் நல்ல பலன் கிட்டும்.
                                                          இதற்குப் பெயர் கழிவுநீக்க முத்திரை
 கட்டைவிரலின் நுனிப்பகுதியால்
மோதிரவிரலின்  கீழ அதாவது மூன்றாவது ரேகை உள்ள இடத்தை தொடவும்.மெல்லிய அழுத்தம் போதுமானது.சம்மணம் ,பத்மாசனம், சித்தாசனம் இந்த நிலையில் சுவாசத்தை சாதாரணமாக நிலையில் வைத்து அதை கவனித்து வரவேண்டும்.ஒரு ௨௦நிமிடங்கள்செய்யும்போதுஉடலின்கழிவுகள்வெளியேறஆரம்பிக்கும்.அப்போதுசிறுநீர்அதிகம்போவது,அதில்வாடைவீசுவது,மலம்அதிகவாடையுடன்அடிக்கடிபோவது,கறுத்துமலம்வெளியேறுவது.வியர்வைஅதிகம்வெளியேறுவது ,அதில்வாடைவீசுவது,பேதிஉண்டாவது, இந்த அறிகுறிகள் அனைத்தும் கழிவு நம் உடலைவிட்டு நீங்குவதாக அர்த்தம். பின்பு மூன்று மாதங்களுக்கொருமுறை ஏழுநாட்கள் தொடர்ந்து செய்தால் கழிவுகள் மீண்டும் சேராது.

Monday, 5 September 2011

நோய் தீர்க்கும் முத்திரைகள்

முத்திரைகள் நமது முன்னோர்களின் இறை ஞானத்தின் மூலம் உணர்ந்து கொள்ளப்பட்ட ஒரு விஷயம். நல்விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய,நம் உடலின் நோய்களை தீர்க்கக்கூடிய வல்லமைகொண்ட அற்புதங்களை நிகழ்த்தும்  ஒரு  முறை. அன்றாடம் நம் வாழ்வில் தேவைப்படும் சமயத்தில், தேவைப்பட்ட முத்திரைகளைச் செய்யும்போது நம் உடல் சம்பந்தமான சிக்கல்களை மிக எளிதாக சரி செய்து கொள்ள முடியும்.
பஞ்ச பூதங்கள் இந்த அண்டத்திலும் உள்ளது. நம் உடலினுள்ளும் எப்படி பிரதிபலிக்கிறது என்பதையும் நாம் முந்தைய பதிவில் கண்டோம்.
பஞ்சபூதங்கள் சமநிலையிலிருந்தால் பிரபஞ்சம் தொடர்ந்து தன பணியை செவ்வனே செய்து கொண்டிருக்குக்கும். அப்படி செய்து கொண்டிருப்பதாலேயே  இன்றளவும்  சீராக இயங்கிக்கொண்டிருகிறது.நம் உடலும் பஞ்சபூத சமன்பாட்டின்படியே சீராக இயங்கிகொண்டிருக்கிறது.நோய்களற்ற நிலையில் உள்ளது.

கட்டைவிரல்

நடுவிரல்

ஆள்காட்டிவிரல்

மோதிரவிரல்

 'மிகினும் குறையினும் நோய் செய்யும்'அய்யன் வள்ளுவர் வாக்குப்படி, இந்த பஞ்ச பூதங்களில் செயல்பாடு மிகுந்து போனாலோ ,அல்லது குறைவு பட்டு போனாலோ அதாவது இயல்பான நிலையிலிருந்து சற்று பிசகிவிட்டாலோ நம் உடல் நோய் வசமாகிவிடும், துன்பம் நம்மை ஆட்கொண்டுவிடும்.

சுண்டுவிரல்
நம்முடைய ஐந்து விரல்களும் ஒவ்வொரு பஞ்சபூத மூலகத்தை குறிக்கும்.கட்டைவிரல் நெருப்பையும் ,ஆள்காட்டி விரல் காற்றையும்,நடுவிரல் ஆகாயத்தையும்,மோதிரவிரல் நிலத்தையும்,சுண்டுவிரல் நீரையும் குறிக்கும்.பெரும்பாலான உடல் ஆரோக்கியக் குறைபாடுகள் ஐந்து வகை மூலங்களின் சமத்துவமின்மையால் ஏற்படுகிறது. பஞ்ச பூதங்கள் என்று அழைக்கப்படும் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியன சமநிலையில் இருப்பதற்குத் தியானம் உதவுகிறது. இந்த ஐந்து வகை மூலங்கள் வேறுவிதமாக நிலம், நீர், நெருப்பு, மரம், உலோகங்கள் என சீனப் பாரம்பரிய மருத்துவத்தில் கூறப்படுகிறது.
தினமும்
காலையில் இருபது நிமிடங்கள் உங்களுக்கு உரிய முத்திரையைத் தேர்வு செய்து
தியான நிலையில் அமருங்கள். நன்கு இழுத்து மூச்சை உள்ளேயும் வெளியேயும்
விடுங்கள். மந்திரங்களோ வேறு சொற்களோ இதில் இல்லை.இனி, முத்திரை வகைகளைப் பற்றிப் பார்ப்போம். பொதுவாக தியானத்தில் 20 – 45 நிமிடங்கள் உங்களுக்குத் தேவையானதென நீங்கள் கருதும் முத்திரையைத் தெரிவு செய்து கொண்டு ஆழ்ந்த சுவாசத்தில் ஈடுபடுதலே போதுமானதெனக் கருதப்படுகிறது, எனினும் சிலமுத்திரைகளுக்கு மந்திரங்களைப் பயன்படுத்துவர்.

Thursday, 1 September 2011

பிரபஞ்சம், அண்டம் , யுனிவர்ஸ்......


 அண்டம்,பிரபஞ்சம் ,யுனிவர்ஸ் என்றெல்லாம் சொல்கிறார்களே. ஒரு நிமிடம் உங்கள் கண்களை மூடி யோசனை செய்து பாருங்கள் , இது எப்படி நடக்கிறது. விஞ்ஞானம் ஆயிரம் விளக்கங்களைக் கூறினாலும் அனைவருக்கும் புரிந்துவிடாது.
ஒரு வெற்றிடமான அந்தரங்கத்தில் சூரியன் ,கோள்கள் ஏகப்பட்ட சமாச்சாரங்கள் இவை எப்படி ஒரு ஒழுங்கு முறையோடு அதனதன் வேலையை தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறது.இதற்கு யார் காரணம்?
இது எப்படி சாத்தியம்? நாம் என்றைக்கும் சிந்தித்துணர முடியா விஷயம். ஆனால் இறை ஞானிகள் பல ஆயிரம் ஆண்டுகட்கு முன்பே சொன்னது ,இந்த பிரபஞ்சம் முழுவதும் ஒரு ஒழுங்கான இயக்கத்தில் தன்பணியை தொடர்ந்து செய்வதன் காரணம்,நீர்,நிலம்,காற்று,ஆகாயம்,நெருப்பு, இந்த ஐந்து விஷயங்கள்தான்.இந்த ஐந்தையும் பஞ்சபூதம் என்கிறோம். இதில் எதாவது ஒன்றில் அதன் செயல்பாட்டில் குறைவுபட்டோ,மிகுந்தோ போனால் பிரபஞ்சம் ,அண்டம் ,யுனிவர்ஸ் என்கிற இந்த விஷயம் இல்லாமல் போயிருக்கும்
சரி அதைவிடுங்க...நாம மனிதனாக உருவம் கொண்டு .....பேசுகிறோம்,..கை, கால்களை அசைக்கிறோம் ...இன்னும் என்னவெல்லாமோ ஜகஜால வித்தையெல்லாம் செய்யறோம் . இதற்க்குக் காரணம் ஒரு ஆற்றல் நமக்குள்ளே இருக்கிறது அதை உயிராற்றல் என்று சொல்லிவிடலாம். இந்த உயிரை யாராவது பார்த்ததுண்டா ? இவ்வளவு விஞ்ஞானம் வளர்ந்தும் விடை தெரியா புதிர் தான் உயிர்.
'''''பரமாய சக்தியுள் பஞ்சமாபூதம் தரம் மாறில்
தோன்றும் பிறப்பு''''''
அவ்வையார் பாட்டைப் பொருளுணர்ந்து பார்க்கும்போது இந்த உயிர் என்கிற மேட்டர் இந்த உடல் என்கிற விஷயமாக மாறுவதற்கு முன்பு கண்களுக்கு புலப்படாத நுண் மூலகங்கலாகத் தான் இருந்தது என்கிறார். அப்படியென்றால் இந்த உயிர் என்பது பஞ்சபூதங்களின் கலவை(our body and soul is a mixture of five elements) என்று உணர முடியும்.
நீங்கள் நன்றாக யோசித்துப் பார்க்கும்போது இந்த பிரபஞ்சம் , இந்த உடல் இவைகளின் மூலம் ,அடிப்படை எல்லாமே இந்த நீர்,நிலம், காற்று, ஆகாயம்,நெருப்பு என்கிற பஞ்ச பூதங்கள்மட்டுமே.அதனால் தான்
''''''அண்டத்தில் உள்ளதே ,பிண்டத்தில் உள்ளது
பிண்டத்தில் உள்ளதே அண்டத்தில் உள்ளது
அண்டமும் ,பிண்டமும் ஒன்றே
அறிந்துதான் பார்க்கும்போது''''''''''''